உலக மகளிர் தினம்: திறமைகளை வெளிபடுத்திய மாணவிகள்

உலக மகளிர் தினம்: 
திறமைகளை வெளிபடுத்திய மாணவிகள் 
08-03-2013
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பைரவி பவுன்டேசன் என்ற அமைப்பும் டோர்காஸ்டு டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து கண்கார்டியா பள்ளி மைதானத்தில் மகளிர் தின விழாவை கொண்டாடினர். இதில் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் மாணவிகள் சிலர் மைதானத்தில் நின்ற 60 அடி உயர தென்னை மரத்தில் ஒரு சிறிய கருவியை காலில் பொருத்திக்கொண்டு மளமளவென மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து போட்டனர். இதைகண்டு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அசந்து போனார்கள்.
இதுபற்றி நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கேட்ட போது தென்னை மரம் ஏறுவதற்கு மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளித்தோம். அதன்பலனாக அவர்கள் இன்று அதனை உங்களுக்கு செய்து காட்டினார்கள், என்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்வாரி லுத்தரன் சபையின் அருள்தாஸ் ஜெபம் செய்தார். இயக்குனர் ஷோபா, மாயா, டோர்காஸ்ட் நிறுவனத்தின் நித்யா சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதல்வர் மீனாட்சிசுந்தரம் வரவேற்று பேசினார். நெல்லை மேயர் விஜிலா சத்யானந்த் சிறப்புரை நிகழ்தினார். செயலாளர் பெருமாள் பிள்ளை, இணைச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News