மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 4–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 4–ம் நாள் காட்சிகள்
07-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 3–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
குளச்சல் கீழக்கரையில் இருந்து மண்டைக்காட்டுக்கு
யானை மீது சந்தனகுட ஊர்வலம் வந்த காட்சி
பகவத்கீதை விளக்க உரை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி
சமய மாநாடு நடந்த காட்சி
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், 10 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 12 மணிக்கு “இராமாயணத்தில் அறம் உரைத்த வல்லவர்கள் அரக்கர்களே! குரக்கர்களே!’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.
சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை
அணிவித்த காட்சி
ஊரம்பு நாட்டியாஞ்சலி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள்
பிற்பகல் 2.30 மணிக்கு சமய மாநாடு நிகழ்வும், மாலை 5 மணிக்கு ஊரம்பு நாட்டியாஞ்சலி நடன பள்ளி வழங்கிய மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பக்தி அலை நிகழ்வும், இரவு 11 மணிக்கு நாகர்கோவில் மணாளன் வழங்கிய பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
யானை மீது சந்தனகுட பவனி ஊர்வலம்
நாட்டியாஞ்சலி குழுவினரின் நாட்டிய வீடியோ காட்சி 
நாகர்கோவில் மணவாளன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி வீடியோ காட்சி

Post a Comment

Previous News Next News