மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வைக்கப்பட்டுள்ள குடில்கள்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதியில் கிறிஸ்மஸ் திருநாளை 
முன்னிட்டு வீடுகளில் வைக்கப்பட்ட அலங்கார குடில்கள் 
24-12-2012
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களால் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் நாளை கொண்டாடப்படுவதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் உள்ள தேவாலயங்கள், வீடுகளில் அலங்கார விளக்குகள், இயேசு பிறந்த நிகழ்வை குறிக்கும் குடில்கள் போன்றைகள் வைக்கப்பட்டுள்ளன.
சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயம்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் அதன் சுற்றுபகுதியில் இளைஞர்களால் அலங்கார விளக்குகள், ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன. சின்னவிளையில் உள்ள ஏராளமான வீடுகளில் குடில்கள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் மற்றும் தெருக்களில் ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
சின்னவிளை அன்பியம் 5-யை சேர்ந்த பென்சிகர் வீட்டில்
வைக்கப்பட்டுள்ள குடிலை படத்தில் காணலாம்
இன்று இரவு 11 மணி அளவில் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை ஜெபம் நடக்கிறது. கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வெளியூருக்கு வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக சென்றிருந்தவர்கள் தற்போது சொந்த ஊர் வந்துள்ளனர். இதனால் சின்னவிளை பகுதி மக்கள் மிகுந்த ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர். ஆங்காங்கே பெரிய ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டு பாடல்கள் போடப்பட்டுள்ளன.
சின்னவிளை அன்பியம் 6-யை சேர்ந்த ஆபேல் வீட்டில்
வைக்கப்பட்டுள்ள குடிலை படத்தில் காணலாம்
சின்னவிளை அன்பியம் 8-யை சேர்ந்த ஜாண் ஜெகதீசன்
வீட்டில் வைக்கப்பட்டுள்ள குடிலை படத்தில் காணலாம்
சின்னவிளை அன்பியம் 8-யை சேர்ந்த ஆஸ்டின் (வார்டு கவுன்சிலர்)
வீட்டில் வைக்கப்பட்டுள்ள குடிலை படத்தில் காணலாம்
கிறிஸ்மஸ் திருநாளை முன்னிட்டு இளைஞர்களால்
வைக்கப்பட்டுள்ள வாழ்த்து பேனர்கள்

செய்தி மற்றும் புகைப்பட உதவி
ஆகாஸ் மற்றும் மனோஜ், சின்னவிளை

Post a Comment

Previous News Next News