மணவாளக்குறிச்சியில்
எம்ஜிஆரின் 25-வது நினைவு தினம் அனுசரிப்பு
24-12-2012
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 25-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். அவரது 25-வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு, மணவாளக்குறிச்சி அ.தி.மு.க. நிர்வாகிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மணவை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கண்ணதாசன், மணவாளக்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் விஜயன், பூதலிங்கம், சார்லஸ், எஸ்.முரளிதரன் உட்பட பல அ.தி.முக உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags:
மணவை செய்திகள்


