மணவாளக்குறிச்சி பாபுஜி கல்வியியல் கல்லூரியில்
குடிமையியல் பயிற்சி முகாம் நடந்தது
24-12-2012
மணவாளக்குறிச்சி பாபுஜி கல்வியியல் கல்லூரியில் குடிமையியல் பயிற்சி முகாம் டிசம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சி பாபுஜி கல்வியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாபுஜி கல்வி குழுமத்தின் நிர்வாக தலைவர் ஆசிரியர் ஜான்சன் தலைமை தாங்கினார். பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் கிறிஸ்டோபர், பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கிறிஸ்டோபர் பாபு மற்றும் ஆசிரியர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சி முகாமில் சைக்காலஜி துறைத்தலைவர் மரியதாசன், வரலாற்று விரிவுரையாளர் ராஜசேகர், கணித விரிவுரையாளர் ஐயப்பன், விரிவுரையாளர் சீதா, ஆங்கில விரிவுரையாளர் சுஜாதா, துணை முதல்வரும், தமிழ் துறைத்தலைவருமான கிளன்னி ஜோஸ், பயோ சயின்ஸ் விரிவுரையாளர் ஜோசியா வின்சி, கணினி விரிவுரையாளர் ஜாஸ்மின், ஆர்டிஸ்ட் கலைச்செல்வி மற்றும் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வியியல் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவ, மாணவிகள் சின்னவிளை, கடியப்பட்டணம், முட்டம் உள்பட பகுதிகளுக்கு சென்று குடிமையியல் பயிற்சி தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மேலும் மாணவிகள் உருவாக்கிய பல கைவினைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
தகவல்
போட்டோஸ் உதவி டைசன், வரலாற்றுத்துறை பாபுஜி கல்வியியல் கல்லூரி, மணவாளக்குறிச்சி |
Tags:
மணவை செய்திகள்


