குழித்துறை அருகே ரெயிலில் பாய்ந்து போலீஸ் ஏட்டு மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை

குழித்துறை அருகே ரெயிலில் பாய்ந்து போலீஸ் ஏட்டு மனைவி கள்ளக்காதலனுடன் தற்கொலை
24-12-2012
குழித்துறை- பாறசாலை ரெயில்வே பாதையில் களியக்காவிளை அருகே நேற்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுலோச்சனா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு தண்டவாளத்தின் அருகே ஆணும், பெண்ணும் உடல்கள் துண்டான நிலையில் பிணமாக கிடந்தனர். பிணமாக கிடந்தவர் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார். பெண் சுடிதார் அணிந்திருந்தார். பிணத்தின் அருகே கைப்பை ஒன்று கிடந்தது. அதில் கடிதங்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது கேரள கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.
இது குறித்த விவரம் வருமாறு:- பாலக்காடு அருகே உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர் வல்சலன். இவர் ரெயில்வே போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார். சுதாமணிக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிளார்க்காக வேலை பார்த்த முரளி (40) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இவர்களது கள்ளக்காதல் விவரம் வெளியே தெரிய வந்ததும் இருவீட்டாரும் கண்டித்தனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி மனமுடைந்தது.
நேற்று முன்தினம் கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றிய இருவரும் இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த முரளியின் பர்சில் ஒரு குழந்தையின் படம் இருந்தது. எனவே அவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கலாம் என தெரிகிறது.

Post a Comment

Previous News Next News