மணவாளக்குறிச்சியில் பிரமாண்ட கிறிஸ்மஸ் குடில் திறப்பு

மணவாளக்குறிச்சியில் 
பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் திறப்பு
24-12-2012
மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் இன்று (24-12-2012) மாலை 4 மணி அளவில் பெரிய அளவிலான கிறிஸ்துமஸ்  குடில் திறப்பு விழா நடந்தது.
பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடிலை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக மணவாளக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் இராஜசேகர் கலந்து கொண்டார். இந்த பிரமாண்ட குடிலை மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி பகுதியை சேர்ந்த  இல்பர்ட், இரமேஷ் மற்றும் வினீஷ் ஆகியோர் இணைந்து வைத்துள்ளனர். இதற்கான சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரை செலவானதாக கூறினர்.
இதுவரை இந்த பகுதியில் நடுத்தர அளவிலான குடில் மட்டுமே வைத்து வந்தனர். தற்போது பெரிய அளவிலான குடில் வைத்துள்ளனர். இந்த வருடம் 5-வது முறையாக குடில் வைக்கப்படுவதாக ஆல்பர்ட் என்பவர் கூறினார். இந்த குடிலை சுற்றுவட்டார மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

Post a Comment

Previous News Next News