மணவாளக்குறிச்சி, சின்னவிளை பங்குபேரவை சார்பாக கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை பங்குபேரவை சார்பாக
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 
24-12-2012
சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயம்

மணவாளக்குறிச்சி, சின்னவிளை பங்குபேரவை சார்பாக  கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை சின்னவிளை பங்குபேரவை அருட்பணியாளர்கள் அருட்தந்தை பெஞ்சமின் போஸ்கோ மற்றும் அருட்தந்தை அகஸ்டின் பீட்டர் ஆகியோர் கூறிய வாழ்த்து செய்தியில்:-

"புனித அந்தோணியார் ஆலயம், மணவாளக்குறிச்சி சின்னவிளை பங்குபேரவை பொறுப்பாளர்கள், ஊர் தலைவர், கவுன்சிலர் மற்றும் அருட்பணியாளர்கள் நாங்கள் அனைவரும் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

மற்ற பிறப்புகள் அனைத்திலிருந்தும் கிறிஸ்துவின் பிறப்பு சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதகுலம் பாவத்தில் மூழ்கிவிடாமல் இவருக்க அவர்களின் பாவங்களை கழுவி தூய்மைபடுத்த கடவுள் தனது ஒரே பேறான மகனை உலகிற்கு அனுப்பினார். மனிதகுலம் பாவப்பிடியில் இருந்து இயேசு மீட்டெடுத்தார். இவ்வாறு ஏசாயா இறைவாக்கினார்.
Fr.Benjamin Bosco
கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்னரே சுமார் நானூறு ஆண்டுகளிக்கு முன்பு முன்மொழிந்த வாக்கு நிறைவேறியது. இயேசு பிறப்பு ஏதோவொரு சாதாரண பிறப்பு அல்ல. கடவுளால் அனுப்பப்பட்ட இறைமகன். அவரை பின்பற்றி வாழவும், அவரைப்போல வாழவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த இறைமகனை நம் சகோதர, சகோதரிகள் அனைவரிடத்திலும் கண்டுணர்ந்து இயேசுவை போல அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளை பிறருக்கு கொடுப்பதன் மூலம் இயேசுவின் பிறப்பு இன்று மட்டுமல்ல என்றுமே ஒரு அர்த்தமுள்ள பிறப்பாகவே இருக்கும்.

Fr.Augustine Peter
23-12-2012 அன்று படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் பங்கில் "ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆர்.சி., சி.எஸ்.ஐ. மற்றும் சால்வேஷன் ஆர்மி அருட்பணியாளர்கள் மற்றும் ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்ட இறைமக்கள் கூடி ஜெபம், கேரல்ஸ் மற்றும் நாட்டிய நாடகம் மூலமாக தங்களது ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
இயேசு ஏதோ ஒரு குலத்துக்கு மட்டும் சொந்தம் அல்ல. மாறாக அவர் அனைவருக்கும் 'Good News' கொண்டு வந்தார். இந்த நாளில் எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மற்றொரு முறை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்."

இவ்வாறு சின்னவிளை புனித அந்தோணியார் ஆலய  அருட்பணியாளர்கள் அருட்தந்தை பெஞ்சமின் போஸ்கோ மற்றும் அருட்தந்தை அகஸ்டின் பீட்டர் ஆகியோர் கூறினர்.

Post a Comment

Previous News Next News