மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 10–ம் நாள் காட்சிகள்
மாநாட்டு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயணம் நிறைவு நிகழ்வும், காலை 7 மணிக்கு மஹாபாரதம் தொடர் விளக்க உரை நிறைவு நிகழ்வும், காலை 8.30 மணிக்கு கோவலன் கண்ணகி கதை பற்றிய வில்லிசை நிகழ்வும், காலை 10 மணிக்கு ‘கண் இழந்தார் சுந்தரர்’ பற்றிய ஆன்மிக உரையும், தொடர்ந்து இலட்சுமி கடாட்சம்’ பற்றிய ஆன்மிக உரையும் நடைபெற்றது.
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் ராஜா மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி |
மண்டைக்காடு திருவிழா காண வரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்க மோர் வழங்கும் காட்சி |
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கும் காட்சி |
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மோர் வழங்கிய காட்சி |
பகல் 1 மணிக்கு ஆன்மிக பணியே! சமுதாய பணியே! என்ற பொருளில் மாபெரும் ஆன்மிக சிந்தனை சொள்ளரங்க நிகழ்வும், மாலை 3 மணிக்கு மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. பரிசு வழங்கும் நிகழ்வில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் ஹெச். இராஜா, பா.ஜ.க. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, மூத்த வழக்கறிஞர் கே.ஆர்.இரத்தினசாமி, தென்குமரி கல்விக்கழகம் செயலாளர் குமாரசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமய மாநாடு காட்சிகள் |
நன்றி அறிவித்து பொன்னாடை அணிவித்த காட்சி |
பக்தி இன்னிசை கச்சேரி |
ஒடுக்கு பூஜைக்கான பொருட்கள் கொண்டு வரும் காட்சி |
இரவு 7 மணிக்கு சமய மாநாடு நிகழ்வும், இரவு 12 மணிக்கு மாபெரும் ஒடுக்கு பூஜையும், தீபாரதனைவும் நடைபெற்றது.
10-ம் நாள் திருவிழா வீடியோ காட்சிகள்
ஒடுக்கு பூஜை காட்சிகள்
Tags:
Events