மணவாளக்குறிச்சியில்
மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள சேதம்
02-11-2012
தமிழகத்தில் நேற்று முன்தினம் நீலம் புயலின் தாக்கத்தால் காற்றுடன் கூடிய மழை வடதமிழகத்தில் அநேக இடங்களில் பெய்தது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் கடந்த 2 நாட்களாக மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொழிந்தது. இதை தொடர்ந்து பல பகுதிகளில் மழை நீர் தங்கி நின்றது. இந்நிலையில் மணவாளக்குறிச்சி, காணவிளை பகுதியில் உள்ள அஹமது என்பவரின் பெற்றோர் வசிக்கும் வீடு தொடர்ந்து பெய்த மழையால் நனைந்தது. நேற்று பகல் வேளையில் இந்த வீட்டின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது.
மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்
இந்த வீட்டின் அருகாமையில் ஸ்டீல் பீரோ செய்யும் தொழிற்கூடம் உள்ளது. அங்கு புதியதாக பீரோக்கள் செய்து, அஹமது வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டு இருந்தது. மழையால் வீட்டின் சுவர் இடிந்து, அருகில் வைக்கப்பட்டிருந்த பீரோ மீது விழுந்தது. இதனால் 2 பீரோக்கள் மிகவும் பழுதடைந்தது.
சுவர் இடிந்து விழுந்ததால் பழுதான பீரோக்கள்
இதுகுறித்து பீரோ செய்யும் தொழிற்கூடம் அமைத்துள்ள சிராஜுதீன் என்பவர் நம்மிடம் கூறும்போது, "அஹமது வீட்டில் சுவர் இடிந்து புதியதாக செய்து வைத்த 2 பீரோக்கள் மீது விழுந்து, அவைகள் மிகுந்த சேதம் அடைந்தது. இதனால் ரூ.10 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். இதற்கு அரசு ஏதேனும் இழப்பீடு தந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினார்.
Tags:
மணவை செய்திகள்