திருமணமான ஒரு வாரத்தில் குழந்தை பெற்ற நர்ஸ் - காதலன் கல்லூரி ஆசிரியர் மகன்

திருமணமான ஒரு வாரத்தில் குழந்தை பெற்ற நர்ஸ் - 
காதலன் கல்லூரி ஆசிரியர் மகன்
03-11-2012
பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மீனாவின் வயிறு பெரிதாக இருந்தது. இதுபற்றி உறவினர்கள் கேட்டபோது, மீனா மழுப்பலாக பதில் கூறினார். திருமணம் முடிந்த அன்று இரவே தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். ஒரு வாரம் அவர் கணவன் வீட்டுக்கே வரவில்லை. சந்தேகப்பட்டு உறவினர்கள் விசாரித்தபோது மீனாவுக்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததாக கூறப்பட்டது.

திருமணம் ஆன மறுநாளே மீனா குழந்தை பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மீனாவை திருமணம் செய்த வாலிபர் பேச்சிப்பாறை போலீசில் புகார் செய்தார். அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது மீனா குடும்பத்தினர் மாப்பிள்ளை தரப்பினரை ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதனால் மீனாவுக்கு நடந்த திருமணம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினையை தொடர்ந்து மீனாவின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்ற கேள்வி அவரது குடும்பத்தினரிடையே எழுந்தது. அவர்கள் இதுபற்றி மீனாவிடம் கேட்டனர்.
இதையடுத்து மீனா உறவினர்களிடம் தனது ரகசிய காதல் விவரங்களை தெரிவித்தார். நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த போது அங்கு நோயாளி ஒருவருடன் அவரது நண்பர் வந்தார். அவர் மீனாவுடன் நெருங்கி பழகினார். இருவரும் பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்தனர். இதில் மீனா கர்ப்பமானது தெரிய வந்தது. இதுபற்றி மீனா அந்த வாலிபரிடம் கூறியபோது, அவர் மீனாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அந்த வாலிபர் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரின் மகன் ஆவார். அவரிடம் செல்வாக்கு இருந்ததால் அந்த பெண்ணை கழற்றி விட்டு விட்டார்.
ஒருமுறை மேக்காமண்டபம் பகுதியில் அவரை சந்தித்து திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்தான் அவரை மீட்டு அனுப்பி வைத்து விட்டனர் என்று மீனா உறவினர்களிடம் தெரிவித்தார். இத்தகவல்களை அறிந்ததும் மீனாவின் உறவினர்கள் அவரது காதலனை தேடி நாகர்கோவில் வந்தனர். நண்பர்கள் உதவியுடன் அவரை கண்டுபிடித்து மீனாவை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் மீனாவின் நடத்தையில் கேள்வி எழுப்பி அவரை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். இருந்தாலும் மீனாவின் உறவினர்கள் மீனாவை திருமணம் செய்ய அந்த வாலிபருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.

Post a Comment

Previous News Next News