மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் நடந்த பக்ரீத் தொழுகை காட்சிகள்

மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசலில் 
நடந்த பக்ரீத் தொழுகை காட்சிகள்
27-10-2012
அனைத்து சமுதாய மக்களுக்கும் "மணவை மலரின்" இனிய "தியாக திருநாள்" நல்வாழ்த்துக்கள். தமிழகத்தில் இன்று (27-ம் தேதி) இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. மணவாளக்குறிச்சி, தக்கலை, நாகர்கோவில், திட்டுவிளை, ஆளூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பக்ரீத் வாழ்த்து பலகை
தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்கள் 
பெருநாள் சிறப்பு வசூல் செய்யப்படுகிறது 
காலையில் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்திருந்த இஸ்லாமியர்கள்
தொழுகைக்கு முன்னர் கைகால் சுத்தம் செய்யப்படுகிறது
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பள்ளிவாசலில் இன்று காலை 7 மணிக்கு பெண்களுக்கான சிறப்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஆண்களுக்கான தொழுகை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதற்காக இஸ்லாமிய சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் காலை 8.30 மணியில் இருந்து பள்ளிவாசலில் வரத்தொடங்கினார். சரியாக காலை 9 மணிக்கு ஆண்களுக்கான சிறப்பு பெருநாள் தொழுகை தொடங்கியது. பெருநாள் தொழுகையை பள்ளிவாசல் இமாம் மௌலவி ஜமீல் உஸ்மானி நடத்தி வைத்தார். 
 தொழுகைக்கு பின்னர் இமாம் சிறப்புரை வழங்கிய காட்சி
தொழுகை முடிந்து பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும் இஸ்லாமியர்கள
வாழ்த்து கூறும் இளைஞர்கள்
தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஒருவருகொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஐஸ் க்ரீம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர்.
 முஹல்ல நிர்வாக உறுப்பினர்கள்
புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியை கொண்டாடிய சிறுவர், சிறுமியர்கள்
இளைஞர் பேரவை உறுப்பினர்கள்

Post a Comment

Previous News Next News