ஆளூர் கோஜ் முஹம்மது சாஹிப் ஒலியுல்லா(ரலி)
தர்ஹா கொடியேற்றம்: யானை மீது பிறைகொடி ஊர்வலம்
29-10-2012
கண்ணியாகுமரி மாவட்டம் ஆளூர் மகான் கோஜ் முஹம்மது சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதற்கான கொடி ஊர்வலம் யானை மீது எடுத்து வரப்பட்டது. ஹிஜ்ரி 1433-ம் ஆண்டு துல்ஹஜ் பிறை 10-ம் நாள் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டது. ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு ஆளூரில் பல சிறப்பு நிகழ்ச்சிகள், பேருரைகள் நடத்தப்பட்டன.
ஆளூர் மகான் கோஜ் முஹம்மது சாஹிப் தர்ஹா
தொடர்ந்து துல்ஹஜ் பிறை 12 (28-10-2012) அன்று ஆளூரில் அமைந்து மகான் கோஜ் முஹம்மது சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா விழா கொடியேற்றப்பட்டது. இதற்கான கொடி யானை மீது எடுத்துவரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைவராக கே.பீர் முஹம்மது, பொருளாளராக ஜே.சாகுல் ஹமீது, செயலாளராக அல்ஹாஜ் ஷேக்பாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களை கொண்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தெற்குபள்ளிதெருவில் இருந்து துவங்கிய ஊர்வலம்
யானை மீது கொடியுடன் அமர்ந்திருந்த சிறுவர்கள்
நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் குற்றிச்செல் "ஸ்ரீ சாஸ்தா செண்டமேளம், கொல்லம் "மகளீர் செண்டமேளம்", தஞ்சாவூரை சேர்ந்த "இஸ்லாமிய தஹரா களி" போன்றவற்றுடன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது பிறைக்கொடி எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் தெற்கு பள்ளிதெருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டது. தொடர்ந்து தைக்காதெரு, நடுத்தெரு, வடக்குபள்ளிதெரு, கடைத்தெரு, ஜின்னாவீதி, ரஹ்மான்தெரு, அஞ்சலகசாலை, கீழத்தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று சுமார் இரவு 8 மணி அளவில் மகான் கோஜ் முஹம்மது சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹாவை சென்றடைந்தது.
கொல்லம் மகளீர் செண்டமேளம்
தஞ்சாவூர் தஹராகளி குழுவினர்
ஆட்டத்துடன் பாடிய தஹராகளி குழுவினர்
திருவனந்தபுரம் குற்றிச்செல் செண்டமேள குழுவினர்
யானை மீது பிறைக்கொடி ஊர்வலம்
கலந்து கொண்ட பொதுமக்கள்
தொடர்ந்து தர்ஹா வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்காக சென்னை வாழ் ஆளூர் முஹல்லவாசிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (29-ம் தேதி) தியாக திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ.தமிழ்மகன் உசேன், சென்னை சமூக அறக்கட்டளை தலைவர் சலீம், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி பேராசிரியர் முஹம்மது அஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகின்றனர்.
செண்டமேள குழுவினருக்கு தேநீர் வழங்கப்பட்டது
பற்களால் தேங்காய் உடைத்து சாகசம் செய்த வாலிபர்
விழாக்குழு தலைவர் கே.பீர்முஹம்மது அவர்களுடன் செண்டமேள குழுவினர்
ஆளூர் சந்திப்பு பகுதியில் ஊர்வலம் சென்ற காட்சி
புகைப்பட உதவி ஆளூர் மாஹின் |
Tags:
Events