மணவாளக்குறிச்சியில்
மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர்
மின்வாரிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு
26-10-2012
மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீரென்று மணவாளக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை (27-ம் தேதி) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக இன்று மாலையில் இருந்து இஸ்லாமிய மக்கள் மகிழச்சியுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டு, பள்ளிவாசல் முன்பு நின்றிருந்தனர். இந்நிலையில் மாலை 6 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இரவு 7 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது.
மின்தடை ஏற்பட்டதால் குவிந்த பொதுமக்கள்
இதனால் பண்டிகை கொண்டாட்ட நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் இரவு 8 மணி அளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. பண்டிகை காலத்திலும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் திரண்டு,மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் குட்டிராஜன் தலைமையில் மின்சார வாரிய அலுவலகம் நோக்கி சென்றனர்.
மின்வாரிய அலுவலகத்தை நோக்கி வந்த பொதுமக்கள்
மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் குட்டிராஜன் வந்த காட்சி
மின்வாரிய அலுவலக வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்
இதில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல செயலாளர் நூருல் அமீன், ஹக்கீம், முஹல்ல உறுப்பினர்கள் முஹம்மது முபீன், சபீக் ரகுமான் மற்றும் சலாவுதீன், சிராஜுதீன், ஜியாவுல் உதுமான், முனீர், மாஹீன், பீர் முஹம்மது, சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் இரவு 8.15 மணி அளவில் பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் குவிந்தனர்.
அப்போது, மின்சாரவாரிய அலுவலகத்தில் இருந்த மின் ஊழியர் ரவியிடம் பண்டிகை நேரத்தில் மின்தடை செய்வதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மின் ஊழியர், மேற்பார்வையாளரிடம் இதுகுறித்து பேசினார். சிறிது நேர்த்தில் மேற்பார்வையாளர் சந்திரசேகர் வந்தார்.
மின் ஊழியர் ரவியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பேரூராட்சி துணைத்தலைவர்
Tags:
மணவை செய்திகள்