மணவாளக்குறிச்சி தண்ணீரில் மிதந்தது

மணவாளக்குறிச்சி சந்திப்பு தக்கலை பஸ் நிறுத்த பகுதி
தண்ணீரில் மிதந்தது
22-10-2012
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து கன்னியாகுமரி வரை கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் பெரிய சிமெண்ட் பைப்கள் போடப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மார்த்தாண்டம், கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்சந்தை, பிள்ளையார்கோவில், மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, இராஜாக்கமங்கலம் வழியாக சிமெண்ட் பைப்புகள் போடப்பட்டன. இதற்கான பணிகள் முடிந்து சில மாதங்களாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பணிக்காக ரோட்டின் ஓரத்தில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டன. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகளில் சில வாரங்களுக்கு முன்பு தான் திங்கள்சந்தை - மணவாளக்குறிச்சி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வாகனங்கள் சென்று வருகின்றன.  
குடிநீர் குழாய் உடைந்த பகுதி
இந்நிலையில் இன்று (22-10-2012) காலை 7:50 மணி அளவில் மணவாளக்குறிச்சி தக்கலை பேருந்துகள் நிறுத்தும் இடம் அருகே திடீரென கூட்டுகுடிநீர் செல்லும் பைப்பின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் குழாய் வழியே சென்ற தண்ணீர் உடைந்த பகுதி வழியாக பீறிட்டு, அதிக அழுத்தத்துடன் வெளியேறியது. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் மளமளவென வந்ததால் மணவாளக்குறிச்சி ஜங்ஷன் பகுதி தண்ணீரில் மிதந்தது. 
தண்ணீரில் தத்தளித்து வரும் வாகனம்
தொடர்ந்து வந்த தண்ணீர், மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் இருந்து, தருவை பகுதியை தாண்டி பெரிய ஆறு செல்வது போல் ஓடியது. வாகனங்கள் தண்ணீரில் தள்ளாடி சென்றன. இந்த திடீர் தண்ணீரால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலை ஓரங்களில் நின்று வேடிக்கை பார்த்தனர்.
குளம் போல காட்சியளிக்கும் மணவாளக்குறிச்சி பகுதி
உடனே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தண்ணீர் செல்வதை உடனே நிறுத்தினர். இதனால் தண்ணீரின் வரத்து குறைந்து முழுமையாக நின்றது. சுமார் முக்கால் மணி நேரம் பாய்ந்தோடிய தண்ணீர் மணவாளக்குறிச்சி பகுதியை மிதக்க வைத்தது.

Post a Comment

Previous News Next News