மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகத்தில்
தலைவி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
23-10-2012
மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மணலிவிளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சர்ச் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு தெரிவித்த சிலர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் 150 அடி அருகாமையில் ஆலயம் எழுப்பக்கூடாது என்று நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி., குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் பார்வையிட்டு எந்தவித கட்டுமான பணிகளும் செய்யவிடாமல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பிரச்சினைக்கு உரிய இடத்தில் மதில் சுவர் கட்டப்பட்டு இருந்தது. ஏ.வி.எம். சானலுக்கு தென்புறம் தான் புதூர். ஆனால் சானலுக்கு வடக்கே ரோட்டு ஓரம் புதூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. மண்டைக்காடு கடலுக்கு செல்லும் பாதை என எழுதப்பட்டு இருந்தது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெகன் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கமலா, ஜெயலட்சுமி, சிவகாமி, நாகராஜன், சந்திரசேகர், ரமேஷ், ஜெயசேகரன் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்