மணவாளக்குறிச்சி பகுதியில்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
இன்று முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது
22-10-2012
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வருடத்திற்காக ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா வாகன ஓட்டுனர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதற்கான நிகழ்ச்சிகள் இன்று (22-10-2012) முதல் துவங்கி 4 நாட்கள் நடக்கிறது.
சரஸ்வதி பூஜை வைக்கப்படும் இடம்
முதல் நாள் ஆயுதபூஜை நிகழ்ச்சிகளை மணவாளக்குறிச்சி பாலம் பகுதியில் உள்ள "குமரி மாவட்ட பாரதிய வாகன வேன் ஓட்டுனர் சங்கம்" நடத்துகிறது. இச்சங்கம் "3-வது ஆண்டு கலைமகள் மற்றும் ஆயுத பூஜை விழாவை" இந்த ஆண்டு நடத்துகிறது.
அன்னதானத்திற்காக சமையல் வேலைகள் நடந்த காட்சி
இன்றைய நிகழ்ச்சியில் பகல் 12 மணிக்கு மாபெரும் "அன்னதானம்" வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள வாடகை வேன் ஓட்டுனர்கள் அன்புடன் அழைத்துள்ளனர். மாலை 6 மணிக்கு சரஸ்வதி பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து வாகனங்களுக்கு பூஜை வைக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 3 நாட்களுக்கும் பிற வாகன சங்கங்கள் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். அப்போது மெல்லிசை நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
Tags:
மணவை செய்திகள்