திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் கோவில்
மார்கழி திருவாதிரை திருவிழா
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு மூன்று யானைகளுடன், சந்தணம், பன்னீர், பால்குடம் ஏந்தி வரும் பக்தர்களின் மாபெரும் ஊர்வலம் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு சிறப்பு பூஜையும், காலை 11 மணிக்கு செதுவூர் சகாதேவனின் வில்லிசை கச்சேரியும் நடந்தது.
யானை ஊர்வலம் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்கன்பாகம் கோவில், ஆற்றின்கரை காலனி முத்தாரம்மன் கோவில், அம்மாண்டி விளை, வெல்லமடி பொட்டல்குழி கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று, பின்னர் கறைகண்டேஸ்வரம் வந்தடைந்தது. இதற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மிசா சோமன்ஜி தலைமை தாங்கினார்.
மணவாளக்குறிச்சியில் இருந்து யானை புறப்பட்ட காட்சி |
யானை ஊர்வல காட்சி |
யானை ஊர்வல வீடியோ காட்சி
மூன்றாவது யானை குருந்தன்கோடு காலனி மகாகணபதி கோவிலில் இருந்து புறப்பட்டு செக்கடிவிளை, வெள்ளிமலை, காருபாறை, மூங்கில்விளை உள்பட பல கோவில்களில் சென்று, பின்னர் கறைகண்டேஸ்வரம் வந்தடைந்தது. சகாதேவன் குழுவினரின் வில்லிசை கச்சேரி நிகழ்ச்சி |
யானைகள் கோவிலுக்கு வந்த காட்சி |
நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சி நடந்த காட்சி |
சிறப்பு சொற்பொழிவு நடந்த காட்சி |
சுவாமி பவனி வந்த காட்சிகள் |
சுவாமி பவனி வந்த வீடியோ காட்சி
Tags:
சுற்றுவட்டார செய்திகள்