மணவாளக்குறிச்சி பகுதியில் நடந்த
முழுஅடைப்பு போராட்டம்
20-09-2012
டீசல் விலையை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டுவந்தது. மேலும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
டீசல் விலை உயர்வை வாபஸ் பெறுவதோடு, சமையல் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி எதிர்கட்சி சார்பில் இன்று (20-09-2012) நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின. தனியார் வாகனங்கள் ஒருசில இடங்களில் ஓடாமல் இருந்தன.
கடைகள் அடைக்கப்பட்டு இருந்த காட்சி |
பள்ளி செல்லும் மாணவர்கள் |
தனியார் கல்லூரி வாகனம் சென்ற காட்சி |
ஆட்டோக்கள் ஓடவில்லை |
அரசு பேருந்துகள் ஓடின |
மணவாளக்குறிச்சி பகுதியில் காலை நேரத்தில் ஒருசில கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடவில்லை. பள்ளிகள் திறந்து இருந்தது. அரசு பேருந்துகள் ஓடின. பேருந்துகளில் வழக்கமான பயணிகளும் பயணம் செய்தனர். லாரிகள் ஓடவில்லை. மதியத்திற்கு மேல் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டன. மாலையில் அநேக கடைகள் திறந்திருந்தன.
Tags:
Manavai News