மணவாளக்குறிச்சியில் 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட
பொது நூலகம் இடிப்பு
23-09-2012
குமரி மாவட்டத்தில் மிகமுக்கிய இடங்களில் மணவாளக்குறிச்சி பேரூராட்சியும் ஒன்று. இங்கு தற்போது பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. இந்த பகுதியில் முதல் முதலில் 1956-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் நாள் "சவோதய பப்ளிக் லைப்ரரி" என்ற பொது நூலகத்தை பேரூராட்சி அலுவலகம் அருகில் டாக்டர். கோபாலபிள்ளை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனை பாபுஜி முன்னாள் பள்ளி தாளாளர் ஜி.சேகர் அவர்களும், குமாரவேல் அவர்களும் ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த நூலகத்தால் இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைந்தார் என்றால் அது மிகையாகாது.
இடிக்கப்படும் பழைய பொது நூலகம், அருகில் பழைய பேரூராட்சி கட்டிடம் அமைந்துள்ளது |
பழைய நூலத்தில் பதியப்பட்டுள்ள கல்வெட்டு |
தற்போது, இந்த நூலகம் அருகிலேயே புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பழைய நூலகம் இடிக்கபப்டுகிறது. இந்த இடத்தில் மணவாளக்குறிச்சி கிராம அலுவலகம் புதிதாக கட்டப்படுவதாக தெரிகிறது. மேலும் அருகில் அமைந்திருந்த பழைய பேரூராட்சி கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் வர இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய பேரூராட்சி அலுவலகம் |
Tags:
மணவை செய்திகள்
புதிய பேரூராட்சி அலுவலகத்தை பழைய பேரூராட்சி அலுவலகம் மறைக்கிறது.இது யாருக்கும் தெரியவில்லையா.
ReplyDelete