மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் விநாயகர் சிலைகள் கரைப்பு


மணவாளக்குறிச்சி, சின்னவிளையில் 
விநாயகர் சிலைகள் கரைப்பு
23-09-2012
மணவாளக்குறிச்சி இந்து முன்னணி சார்பில் 20-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா கடந்த 19-ம் தேதி மாலை விநாயகர் சதுர்த்தி பூஜை தொடங்கியது தொடர்ந்து பொங்கல் வழிபாடு, தீபாராதனை நடந்தது. நேற்று காலை யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இதில் இந்து முன்னணி தலைவர் வித்தியாதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் மிசா சோமன், விழாக்குழு துணைத்தலைவர் ரெத்தினமணி, பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் பேசினர்.

மாவட்ட சட்ட ஆலோசகர் பாலசந்தர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலம் மணவாளக்குறிச்சி, தருவை, பிள்ளையார்கோவில், சேரமங்கலம், வடக்கன்பாகம், பாபுஜிதெரு வழியாக சென்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் 9 விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.
அன்னதானம் நடைபெற்ற காட்சி
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள  வாகனங்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் வந்த காட்சி
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வரும்
விநாயகர் ஊர்வலம்

ப.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பேசிய காட்சி
சின்னவிளை கடற்கரையில் ஊவலம் வந்த காட்சி
கரைப்பதற்கு முன் பூஜைக்கான வைக்கப்பட்டுள்ள
விநாயகர் சிலைகள்

சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள்
கரைக்கப்பட்ட காட்சிகள்
விநாயகர் சிலை ஊர்வல வீடியோ காட்சிகள்

1 Comments

  1. Thanks to all those associated with manavaimalar... Great job friends keep itup.......
    Its wonderful to c all my friends......thanks for giving this opportunity..... JAI SREE RAM

    Arun.C

    ReplyDelete
Previous News Next News