மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு
மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா
மூன்றாம் ஜியாரத் நிகழ்வுகள்
03-06-2012
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் அமைந்துள்ள மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா ஹிஜ்ரி ஆண்டு 1433 ரஜப் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. முதல் நாளில் இருந்து பிறை 13 வரை "மௌலூது ஷெரீப்" ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்று, தொடர்ந்து நேர்ச்சை வழங்கப்பட்டது. 31-05-2012 அன்று இரவு 9 மணி அளவில் "ஞானபுகழ்ச்சி" பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
|
நேர்ச்சைக்கு கொண்டுவரப்பட்ட அரிசி மூடைகள் |
|
நன்கொடையாக வழங்கப்பட்ட ஆடு |
|
நன்கொடையாக வழங்கப்பட்ட கோழிகள் |
|
நேர்ச்சை வழங்குவதற்காக சமையல் தயார் செய்யப்படுகிறது |
03-06-2012 ஞாயிற்றுகிழமை மூன்றாம் ஜியாரத் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள் நேர்ச்சைக்கான நன்கொடைகள் வழங்கினர். மாலையில் மௌலூது ஓதப்பட்டு, பின்னர் கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து நேர்ச்சை வழங்கப்பட்டது. அனைத்து சமூக மக்களும் நேர்ச்சை வாங்கி சென்றனர்.
|
கொடி இறக்கப்படுகிறது |
|
முஹல்ல தலைவர் ஏலம் போடப்பட்ட காட்சி |
|
கோழியை ஏலம் பிடித்தவர் பெறும் காட்சி |
|
நேர்ச்சை பார்சல் செய்து வைக்கப்பட்டுள்ளது |
|
இளைஞர்கள் நேர்ச்சைக்கான ஏற்பாடுகள் செய்த காட்சி |
|
நேர்ச்சை வாங்க வரிசையில் நின்ற பொதுமக்கள் |
|
மணவை முஸ்லிம் முஹல்ல தலைவர் ஜனாப்.பஷீர் நேர்ச்சை வழங்குவதை துவங்கி வைத்த காட்சி |
|
பொதுமக்கள் நேர்ச்சை வாங்கும் காட்சி |