கல்லடிவிளை அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 2012

கல்லடிவிளை, இந்து ஊராளி சமுதாய
அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
சித்திரை திருவிழா 2012
09-05-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை, இந்து ஊராளி அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா திருநாள் மே 8 (சித்திரை 26 - 30) முதல் 12- தேதி முடிய நடைபெறுகிறது. ஒன்றாம் நாள் திருவிழா 08-05-2012 அன்று நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு சுப்ரபாதமும், 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு பக்தி கானங்களும் நடைபெற்றது.
திருவிழா அழைப்பிதழ்
கோவிலுக்கு செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள
அலங்கார வளைவு
அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்

அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் முகப்பு தோற்றம்
மாலை 4.00 மணிக்கு "மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி" நடைபெற்றது. இப்போட்டியை மணவாளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.எஸ்.சத்தியவாணி முத்து துவங்கி வைத்தார். இந்து ஊராளி சமுதாய தலைவர் கெ. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து ஊராளி சமுதாய பொருளாளர் சி.கோபி திருவிளக்கு பூஜைக்கு தலைமை வகித்தார். என்.மகேஸ்வரி அப்பு துவக்கி வைத்தார். வி.பிறீதா முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் எஸ்.அனிஷ் நன்றியுரை வழங்கினார். இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகளை இந்து ஊராளி சமுதாய நிர்வாகக்குழுவும், ஊரமக்களும் செய்து வருகின்றனர்.



திருவிளக்கு பூஜை நடைபெற்ற காட்சிகள் 
கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குபவர் "Dev Digital Studio and Video, Manavalakurichi, Cell: 97867 56389.


Post a Comment

Previous News Next News