மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு
மகான் பட்டாணி ஸாஹிப் ஒலியுல்லா(ரலி) தர்ஹா ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
23-05-2012
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் மகான் பட்டாணி ஸாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹா ஆண்டுவிழா இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ரஜப் மாதம் முதல் தேதியில் இருந்து 13-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா 2012 மே மாதம் 22-ம் (ஹிஜ்ரி 1433 ரஜப் பிறை) தேதியில் இருந்து ஆரம்பமானது. முதல் நாள் நிகழ்ச்சியாக 22-05-2012 செவ்வாய்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு, காணவிளை, காந்தாரிவிளை, குழிவிளை, பள்ளிதெரு, தேங்காய்கூட்டுவிளை, தருவை, மணவாளக்குறிச்சி சந்திப்பு, காந்திநகர், ஆசாரிதெரு வழியாக மாலை 730 மணிக்கு தர்ஹா வந்தடைந்தது. கொடி ஊர்வலம் சென்றவர்களுக்கு தருவையை சேர்ந்த ஜனாப்.சேமக்கண் சார்பில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இரவு 7.45 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சி தர்ஹாவில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி முஹல்ல நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி ஜும்மா மசூதியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்ட காட்சி |
மகான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா (ரலி)
கொடி ஊர்வல வீடியோ
மணவாளக்குறிச்சி ஜங்ஷன் பகுதியில் வந்த கொடி ஊர்வலம்
கொடியேற்று நிகழ்ச்சி முடிந்தவுடன் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல தலைவர் ஜனாப்.பஷீர் அவர்களின் சார்பில் “பாயாசம்” வழங்கப்பட்டது. தொடர்ந்து தர்ஹா வளாகத்தில் “மௌலுத் ஷரீப்” ஓதுதல் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டது.
தர்ஹாவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற வீடியோ காட்சி
"பாயாசம்" விநியோகம் செய்யும் இளைஞர்கள் |
தர்ஹா வளாகத்தில் "மௌலூது ஷரீப்" ஓதப்படுதல் |
முதல் நாள் நேர்ச்சை வழங்கப்பட்ட காட்சி |
31-05-2012 வியாழன் அன்று இரவு 9 மணிக்கு “ஞானபுகழ்ச்சி பாடுதல்” நிகழ்ச்சி நடைபெறும். 01.06.2012 அன்று அதிகாலை 5 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. 03.06.2012 ஞாயிறு இரவு 7 மணிக்கு 3-ம் ஜியாரத் நேர்ச்சை வழங்கப்படும்.
3-ம் ஜியாரத் காணிக்கை, நன்கொடை, அரிசி, ஆடு, கோழி மற்றும் பொருட்கள் 01-06-2012 வெள்ளிஅன்று காலை 9 மணி முதல் முஹல்ல அலுவலகம் மற்றும் தர்ஹா வளாகத்தில் பெற்றுக்கொள்ளப்படும். மகான் பட்டாணி ஸாஹிப் ஒலியுல்லா (ரலி) தர்ஹா ஆண்டுவிழா ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் நடத்துகிறது.
Tags:
Events