மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் முதல் நாள் நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 
முதல் நாள் நிகழ்ச்சிகள்

05-03-2012
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சிகள் 04-03-2012 அன்று துவங்கியது. காலை 7.30 மணிக்கு திருக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பற்றிய விரிவான செய்திகள் மணவை மலரில் காண இங்கே க்ளிக் செய்யவும். 

     தொடர்ந்து காலை 9 மணி முதல் சமய மகாநாடு நடைபெற்றது. மாநாட்டை திறந்து வைத்து திறப்புவிழா பேருரையை குலசேகரபட்டினம் அருள் ஞானபீடம், ஸ்ரீமத் சுவாமி சண்முக ஆனந்த மகராஜ் வழங்கினார். தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் K.T.பச்சைமால் குத்துவிளக்கேற்றி சிறப்புரை வழங்கினார். 

    75-வது இந்து சமய மாநாடு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையை கேரள மாநிலம் போக்குவரத்து துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் V.S. சிவகுமார் வழங்கினார். விழா மலரை S.புலிகேசி I.P.S. (D.G.P. Fire & Rescue Service, Govt. of Kerala) அவர்கள் பெற்றுகொண்டார். ஹைந்தவா சேவா சங்க தலைவர் V. கந்தப்பன்,B.A. தலைமை தாங்கினார். இறைவணக்கம் செல்வி.M.H.தேவி,B.Sc., மற்றும் R.பகவதி ஆகியோர் செய்தனர். வெள்ளிமலை, ஸ்ரீ விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ் மற்றும் தவத்திரு சுவாமி கருணானந்தாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கினார்.


குமாரகோவில் ஸ்ரீ ராம்ஜி ஆசிரம தபஸ்வினி ஓம்பிரகாஷ் யோகினி, நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரம யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, கன்னியாகுமரி கேந்திர சி.லீலா ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்திய காட்சி 
      பகல் 12 மணிக்கு "பஜனை"யை எம்.செல்லையன் பாகவதர் குழுவினர் நடத்தினர். பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 3006 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. திங்கள்சந்தை திருமதி சாரதா நடராஜன் முதல் திருவிளக்கை ஏற்றி வைத்தார். குமாரகோவில் ஸ்ரீ ராம்ஜி ஆசிரம தபஸ்வினி ஓம்பிரகாஷ் யோகினி, நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஸ்வரி ஆசிரம யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, கன்னியாகுமரி கேந்திர சி.லீலா ஆகியோர் திருவிளக்கு பூஜையை நடத்தினர்.




திருமதி சாரதா நடராஜன் முதல் திருவிளக்கு தீபம்
ஏற்றிய காட்சிகள்  
முதல் திருவிளக்கு தீபம் ஏற்றும் வீடியோ காட்சி 

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் 


கோவிலின் முன்புறம் உள்ள சாலையில் திருவிளக்கு
பூஜை செய்யும் பெண்கள் 
     இரவு 8 மணிக்கு இலட்சுமிபுரம் பிரியதர்ஷினி நாட்டியப்பள்ளி மாணவிகளின் மாபெரும் பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். 

பிரியதர்ஷினி நாட்டியபள்ளி மாணவி, தன்னுடைய
குருவிடம் ஆசி வழங்கும் காட்சி 
தன்னுடைய மாணவிக்கு காலில் சலங்கை கட்டிவிடும் குரு
பரதநாட்டிய கலைநிகழ்ச்சிக்கு முன்னர் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது 




பிரியதர்ஷினி நாட்டியபள்ளி மாணவிகளின் நாட்டிய காட்சிகள் 
நாட்டிய வீடியோ காட்சி -1

நாட்டிய வீடியோ காட்சி -2






பிரியதர்ஷினி நாட்டியபள்ளி மாணவிகளின் நாட்டிய காட்சிகள்  
       மண்டைக்காடு திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நாகராஜன் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்மனை வழிபடவேண்டி பக்தர்கள் வசதியாக செல்ல
கம்புகளை கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது 
கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட
கலெக்டர் நாகராஜன் 
பாதுகாப்பு பணிகுறித்த ஆய்வை மேற்கொண்ட மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் 
மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்த காட்சி 
கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில்
உள்ள சிறப்பு காவல் படையினர் 


Post a Comment

Previous News Next News