மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 2-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
2-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் 

06-03-2012
   மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 2 நாள் நிகழ்ச்சி 05-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 7 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. 7 மணி முதல் 9 மணி வரை அருட்பெருஞ்ஜோதி "அகவல் பாராயணம்" நிகழ்ச்சியை மண்டைக்காடு வள்ளலார் மன்ற திருமதி. R.S.லெட்சுமி பாய் குழுவினர் நடத்தினர். 


   பிற்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்டைக்காடு Dr.S.கிருஷ்ணசுவாமி ஆசான் தலைமை தாங்கினார். மருதிவிளை சுடலைமாட சுவாமி கோயில் சமயவகுப்பு மாணவிகள் செல்வி. K .அபிராமி மற்றும் A.ஸ்ரீஜா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். முன்னுரையை தலைவர் வழங்கினார். தொடர்ந்து மாநாட்டு சொற்பொழிவு நடைபெற்றது. சுசீந்திரம் M.முருகன், இந்து சமய தத்துவ விளக்கம் என்ற பொருளிலும், அதங்கோடு புலவர் கோ.கொவிந்தநாதன், முத்தமிழ் என்ற பொருளிலும், இலந்தையடிதட்டு E.வேல் முருக பெருமான்,  திருப்புகழ் என்ற பொருளிலும் சொற்பொழிவு நிகழ்த்தினர்.

      மாலை 3 மணி முதல் 5 மணி வரை இராஜாக்கமங்கலம் ஸ்ரீ நினைத்த கதை முடித்த விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர், சொல்வேந்தன் குட்டி கிருபானந்த வாரியார் சு.ஸ்ரீ பிள்ளையார் நயினார் அவர்கள் நடத்திய இராமாயண தொடர் விளக்க உரை நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை தெக்குறிச்சி ஆதிபராசக்தி இன்னிசைக்குழுவினர் சுயம்புலிங்கம், கோபாலகிருஷ்ணன், இராகவன் ஆகியோரின் பக்தி பஜனை நடைபெற்றது. 

அருட்பெருஞ்ஜோதி "அகவல் பாராயணம்" நிகழ்ச்சியை நடத்திய
மண்டைக்காடு வள்ளலார் மன்ற திருமதி. R.S.லெட்சுமி பாய் குழுவினர் 
 
பக்தி பஜனை நிகழ்ச்சி
     இரவு 7  மணி முதல் 11 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. கண்ணமங்கலம் செயற்குழு உறுப்பினர் Dr.K.பத்மதாஸ் தலைமை தாங்கினார். சுண்டபற்றிவிளை ஒய்வு பெற்ற சமூகநலத்துறை கண்காணிப்பாளர் T.ஸ்ரீ சிவசங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். குளச்சல் காளிமார் ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோவில் சமய வகுப்பு மாணவிகள் செல்வி M.V. எழில்குமாரி மற்றும் செல்வி M.V. ஸ்ரீகுமாரி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். தொடர்ந்து வெள்ளிமலை சிவா அவர்களின் கந்தன் கருணை என்ற தலைப்பில் சொற்பொழிவும், சுசீந்திரம் புலவர் வெ.இராமசுவாமி அவர்கள் முன் உதித்த நங்கை என்ற தலைப்பில் சொற்பொழிவும் வழங்கினர்.மேற்கு நெய்யூர் செயற்குழு உறுப்பினர் P.V. தம்பி நன்றியுரை வழங்கினார்.

கதகளி துவங்குவதற்கு முன்னர் நடைபெற்ற சொற்பொழிவு 
கதகளி துவங்குவதற்கு முன்னர் நடைபெற்ற இசை நிகழ்ச்சி 
     தொடர்ந்து இரவு 11 மணி முதல் கேரள மாநிலம் வாக்கம் நரேந்திரன் நாயர் வழங்கிய கதகளி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வழங்கியவர்கள் மண்டைக்காடு தேவஸ்தானம் ஸ்ரீ துர்க்கா தேவி குழுவினர்கள் ஆவர்.

      மண்டைக்காடு திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுபுறங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கோவிலில் 4 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிற்கின்றது. மேலும், வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட டேங்கோ, விஜய் மற்றும் குமரி மாவட்ட ஓரா போன்ற மோப்ப நாய்கள் சோதனைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. திருட்டை தடுக்க போலீசார் சாதாரண உடையில் கோவிலை சுற்றி வலம் வருகின்றனர். 








கேரள மாநில வக்கம் நரேந்திரன் நாயர் வழங்கிய கதகளி
நிகழ்ச்சியின் பல்வேறு காட்சிகள் 
கதகளி நிகழ்ச்சி வீடியோ - 1

கதகளி நிகழ்ச்சி வீடியோ - 2


கதகளி நிகழ்ச்சி வீடியோ - 3

     மண்டைக்காடு செயல் அலுவலர் விஜய சங்கர், குமாரபுரம் செயல் அலுவலர் சுருளிவேலன், ஐயப்பன், சிரில்ராஜ் மற்றும் சிதம்பரதாணு பிள்ளை ஆகியோர் மண்டைக்காடு திருவிழாவை முன்னிட்டு திறக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது எல்லா கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர். மேலும் சிலகடைகளில் இருந்து போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


திருவிழா சிறப்பு கடைகளில் ஆய்வு நடத்திய மண்டைக்காடு,
குமாரபுரம் செயல் அலுவலகர்கள் 
உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட
கோவில் பணியாளர்கள் 
     மண்டைக்காடு கோவில் திருவிழா மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. அன்று ஒருநாள் வசூலான உண்டியல் தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதனை கோவில் நிர்வாகி தெரிவித்தார்.



Post a Comment

Previous News Next News