கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சிகள்

கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சிகள்
12-05-2012
கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சிகள் 11-05-2012 அன்று நடைபெற்றது. அன்று காலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் விழா ஆரம்பமானது. காலை 5 மணிக்கு பக்தி கானங்களும், 6.30 மணிக்கு தீபாரானையும், 7.30 மணிக்கு பக்தி கானங்களும், 8 மணிக்கு நாதஸ்வரமும், 8.30 மணிக்கு செண்டைமேள நிகழ்ச்சியும் நிகழ்ந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கதை பற்றிய வில்லிசை பாட்டும், 10.30 மணிக்கு தீபாரானதையும், தொடர்ந்து ஸ்ரீ  முத்தாரம்மன் மற்றும் உச்சினி மாகாளி அம்மன் கதை பற்றிய வில்லிசை பாட்டும், 12.30 தீபாராதனையும், தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான்
மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சி



மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கர் 
மதியம் 1 மணிக்கு மாபெரும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் எஸ். சுதர்சன் தலைமை தாங்கினார், செயற்குழு உறுப்பினர் ஏ.மன்மதன் முன்னிலை வகித்தார். 




மாபெரும் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
அன்னதான நிகழ்ச்சி வீடியோ காட்சி


அன்னதான நிகழ்ச்சி வீடியோ காட்சி

விழாவில் கலந்துகொண்ட பெண்கள்

மாலை 4 மணிக்கு பக்தி கானங்களும், 5 மணிக்கு நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியும், 5.30 செண்டைமேள நிகழ்ச்சியும், 6.30 தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு தேவ கன்னிமார்கள் கதை பற்றிய வில்லிசை பாட்டும், 7.30 தீபாராதனையும் நடைபெற்றது. 

பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜி.பி.மணி
கேரள பல்கலைகழக இணை பதிவாளர்
திருமதி ஷாமளா பேசிய காட்சி
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசு
வழங்கும் கேரள பல்கலைகழக இணைபதிவாளர் 
10,12-ம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு
வழங்கப்பட்ட பரிசுகள்
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பரிசு
வழங்கும் கேரள பல்கலைகழக இணைபதிவாளர் 
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் பெற்றோருக்கு
பரிசு வழங்கும் கேரள பல்கலைகழக இணைபதிவாளர் 

கேரள பல்கலைகழக இணைபதிவாளர் ஷாமளா அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்த காட்சி
இரவு 8 மணிக்கு 2010-2011 ஆண்டில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு  பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசுகளை திருவனந்தபுரம், கேரள பல்கலைகழக இணை பதிவாளர் திருமதி எஸ். ஷாமளா அவர்கள் வழங்கினார். இரவு 9 மணிக்கு களபம் சார்த்துதல் நிகழ்வும், இரவு 10 மணிக்கு வலியகேசி, சிறியகேசி ஸ்ரீ தம்புரான் பாட்டு கதை பற்றிய வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மணவாளக்குறிச்சி, ஆற்றின்கரை வில்லிசை வேந்தன் கே.சனாதனன் குழுவினர் வழங்கினார். 12 மணிக்கு தீபாராதனையும், அதிகாலை  3 ஸ்ரீ சப்பாணி போற்றி கதை பற்றிய வில்லிசை நிகழ்ச்சியும்,  காலை 4 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சதானன் குழுவினரின் வில்லிசை கச்சேரி நடைபெற்ற காட்சி
வில்லிசை நிகழ்ச்சி வீடியோ


Post a Comment

Previous News Next News