கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 3-ம் நாள் நிகழ்ச்சிகள்

கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில்
சித்திரை திருவிழா 3-ம் நாள் நிகழ்ச்சிகள்
11-05-2012
கல்லடிவிளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் சித்திரை திருவிழா 3-ம் நாள் நிகழ்ச்சிகள் 10-05-2012 அன்று நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியும், 5 மணிக்கு பக்தி கானங்களும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு பக்தி கானங்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு ராஜாக்கமங்கலம் ஏ.சோமன் மற்றும் ஐயப்பன் குழுவினரின் நாதஸ்வரம் மேள நிகழ்ச்சி நிகழ்ந்தது. 12.15 மணிக்கு திருவனந்தபுரம் பாச்சல்லூர் புஷ்கரன் மற்றும் ராதாகிருஷ்ணன் குழுவினரின் செண்டைமேள நிகழ்ச்சி நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் கோவில் வீடியோ

சென்டைமேள நிகழ்ச்சி
செண்டைமேள வீடியோ காட்சி

12.30 மணிக்கு மதுரை, வாடிப்பட்டி விருமாண்டி திரைப்பட புகழ் ஏ. பூஷிராஜாவின் அபிநயா கலைக்குழுவினரின் "தப்பாட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருவனந்தபுரம், தெற்கு ரெயில்வே கெ.அனில்குமார், கல்லடிவிளை விவிதா ட்ரான்ஸ்போர்ட் ஆர்.முருகேசன், சிவந்தமண் சி.கோபி, ஏ.சந்திரன் அம்பி, ஏ.சுந்தர், எம்.பி. ரதீஷ் ஆகியோர் உபயோகமாக வழங்கினர். 12.45 மணிக்கு திருவனந்தபுரம் ராஜாஜி நகர், ஜெயா டிவி புகழ் ஜே.கே. சதீஷ் சங்கமம் வழங்கும் சினாரி மேளமும், 1 மணிக்கு கோட்டயம் ஸ்ருதி வனிதா வழங்கும் "மாபெரும் பெண்கள் சிங்காரி மேள நிகழ்ச்சியும் நடந்தது. 


சேரமங்கலம் ஸ்ரீ ஆழ்வார்கோவில்
ஆழ்வார்கோவிலில் பெண்கள் செண்டைமேள காட்சி
ஊர்வலம் வந்த காட்சி
ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள்
ஊர்வலத்தில் கலந்துகொண்ட செண்டைமேளம்
இசைத்த பெண்கள்


சிவன் வேடமணிந்த கலைஞர்
செண்டைமேள காட்சி
பல்வேறு வேடமணிந்த கலைஞர்கள்


ஊர்வல வீடியோ காட்சி-1

ஊர்வல வீடியோ காட்சி-2

ஊர்வல வீடியோ காட்சி-3

ஊர்வல வீடியோ காட்சி-4

ஊர்வல வீடியோ காட்சி-5

ஊர்வல வீடியோ காட்சி-6

ஊர்வல வீடியோ காட்சி-7

ஊர்வல வீடியோ காட்சி-8

மதியம் 2 மணிக்கு சேரமங்கலம் அருள்மிகு தென்திருவரங்கத்து ஆழ்வார் சுவாமி கோவிலிலிருந்து மேளதாளத்துடன் விளக்கு கெட்டு பவனியுடன் யானை மீது பால்குடமும், சந்தனமும் எடுத்து வருவதுடன் மணவாளக்குறிச்சி அடம்புவிளை அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் சென்று களபம் எடுத்து அருள்மிகு ஸ்ரீ தம்புரான் சன்னதி வந்தடைதல் நிகழ்ச்சியான "மாபெரும் ஊர்வலம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கும்பம் கோருதல் நிகழ்ச்சி நடந்தது. 



மணவாளக்குறிச்சி சந்திப்புக்கு வந்த ஊர்வலம்
தொடர்ந்து இரவு ஒன்பது மணிக்கு குமரி மாவட்டம், சுண்டபற்றி விளை ஜெகநாதன் வில்லிசை குழுவினரின், ஸ்ரீ சாஸ்தா சுவாமி கதை பற்றிய வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து ஸ்ரீ நாராயண சுவாமி கதை பற்றிய வில்லிசையும்,  1 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து ஸ்ரீ பூதத்தான் கதை பற்றிய வில்லிசையும், அதிகாலை 4 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

சாலையில் ஒளி விளக்குகள் ஏற்றப்பட்ட காட்சி
அலங்கார சப்பரம்
கிருஷ்ணருக்கு ஏற்றப்பட்ட திருவிளக்குகள்
பத்ரகாளி வேடமணிந்த கலைஞர்
கோவிலை அடைந்த ஊர்வல வீடியோ காட்சி



Post a Comment

Previous News Next News