மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
3-ம் நாள் (06-03-2012) நிகழ்ச்சிகளின் தொகுப்பு
07-03-2012
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 3-ம் நாள் திருவிழா 06-03-2012 அன்று நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை திருவிடைகோடு உன்னிகிருஷ்ணன் பஜனை குழுவினரின் பஜனை நடைபெற்றது. 10 மணி முதல் 12 மணி வரை இராமாயணம் தொடர் விளக்க உரை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு உன்னிகிருஷ்ணன் அவர்களின் பஜனை நடைபெற்ற காட்சி |
பகல் 12 மணிக்கு நடைபெற்ற சமய வகுப்பு மாநாட்டில் சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் வழங்கிய காட்சி |
சமய மாநாட்டில் சொற்பொழிவு நடைபெற்ற காட்சி |
பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சமய மகாநாடு நடைபெற்றது. இதில் மணக்காவிளை செயற்குழு உறுப்பினர் P.ரெத்தினசுவாமி தலைமை வகித்தார். பரப்பற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் சமயவகுப்பு மாணவிகள் R.பிரேமா மற்றும் A.ரம்யா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். மெய்பொருள் என்ற தலைப்பில் சிவபூஜை M.ஜெயச்சந்திரன் சொற்பொழிவு வழங்கினார். வெள்ளமடம், நன்னெறி மன்ற செயலாளர் S.சிவன்பிள்ளை, அறம் வளர்த்த நாயகி என்ற தலைப்பிலும், கொட்டாரம் புலவர் பா.நாராயண சிவா, சேக்கிழார் தந்த அமுதம் என்ற தலைப்பிலும், உதயா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் P.முத்துக்குமார், யோகாவே மருந்து என்ற தலைப்பிலும் சொற்பொழிவு வழங்கினர்.
பகல் 1.30 மணியளவில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர் |
மாலை 5 மணி அளவில் கீழ்க்கரையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம் வந்தது |
யானை ஊர்வலம் வந்த போது எடுத்த படம் |
கீழ்க்கரையில் இருந்து யானை ஊர்வலம் வந்த வீடியோ காட்சி
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஈத்தாமொழி திருவள்ளுவர் இலக்கிய பேரவை வழங்கிய சிந்தனை சொல்லரங்கம் நடைபெற்றது. இதில் T.பொன்னுசுவாமி நடுவராகவும், T.பெரிய நாடார் முன்னிலையும் வகித்தனர். இந்து சமய வளர்ச்சியில் பேரும் தொண்டாற்றியவர் என்ற பொருளில் சொல்லரங்கம் நடைபெற்றது.விவேகானந்தரை பற்றி S.வைரவநாதன், ஆதிசங்கரரை பற்றி C.முருகேசன், அருட்பிரகாச வள்ளுவர் பற்றி A.ராஜகோபால், பாரதியார் பற்றி R.மணிகண்டன், கண்ணதாசன் பற்றி P.செல்வகதீஸ்வரன் ஆகியோர் பேசினர்.
மாலை 5 மணிக்கு கீழக்கரையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் சந்தனகுடத்துடன் பக்தர்கள் வந்தனர். செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தது.
திருவிழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்ற காட்சி |
தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது |
மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை அகஸ்தீஸ்வரம், விவேகானந்தா கல்வியியல் கல்லூரி இசைத்துறை விரிவுரையாளர் திருமதி S.திலகவதி குழுவினர் வழங்கிய கர்நாடக இன்னிசை நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை குலசேகரம், படநிலம் ஹரே கிருஷ்ணா N.சங்கர் நடத்திய பக்தி அலை நிகழ்ச்சி நடந்தது.
இசைத்துறை விரிவுரையாளர் எஸ்.திலகவதி கர்நாடக இசை நிகழ்த்திய காட்சி |
இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லக்கு கோவிலை சுற்றி சென்டைமேலத்துடன் வளம் வந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
அம்மன் வெள்ளி பல்லக்கில் உலா வருதல் |
செண்டை மேள வீடியோ காட்சி
கல்லடிவிளை குழுவினரின் செட்டைமேளம் |
அம்மன் வெள்ளி பல்லக்கில் வருவதை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்க்கும் காட்சி |
அம்மன் வெள்ளி பல்லக்கில் உலா வரும் காட்சி - 1
அம்மன் வெள்ளி பல்லக்கில் உலா வரும் காட்சி - 2
அம்மன் வெள்ளி பல்லக்கில் உலா வரும் காட்சி - 3
அம்மன் பல்லக்கில் செல்லும் காட்சி |
இரவு 8 மணிக்கு நடைபெற்ற சமய மாநாட்டு நிகழ்ச்சி |
இரவு 8 மணி முதல் 11 மணி வரை சமய மகாநாடு நடந்தது. இதில் பெரும்செல்வவிளை துணைத்தலைவர் M.பத்மநாபபிள்ளை தலைமை தாங்கினார். கன்னிகா ஜூவல்லரி உரிமையாளர் K.துளசிமணி மார்பன் முன்னிலை வகித்தார். சாத்தான்விளை முத்தாரம்மன் திருக்கோவில் சமய வகுப்பு மாணவிகள் R.பிரியதர்ஷினி மற்றும் G.சுகன்யா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். ஆரல்வாய்மொழி தர்மானந்தா ஆசிரம சித்தகிரி தவத்திரு சுவாமி தர்மானாந்தஜி சரஸ்வதி சிறப்பு சொற்பொழிவு வழங்கினார். தொடர்ந்து இரவு 11 மணி முதல் நாகர்கோவில் K .மணாளன் வழங்கிய ராகசுரபியின் பக்தி இன்னிசை விருந்து நடைபெற்றது.
கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் |
Tags:
Events