மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
4-ம் நாள் (07-03-2012) திருவிழா நிகழ்ச்சிகள்
08-03-2012
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 4-ம் நாள் நிகழ்ச்சிகளில் காலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை இராமாயணம் தொடர் விளக்க உரை நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணி வரை பக்தி இன்னிசை பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மனு முதல் பிற்பகல் 2.30 மணி வரை பாலசுப்பிரமணியன் திருக்கோவில் பஜனை சங்க குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெற்றது.
|
காலை வேளையில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சி |
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஹைந்தவ சேவா சங்க துணைத்தலைவர் A.தங்கசுவாமி தலைமா தாங்கினார். சாத்தான்விளை முத்தாரம்மன் சமய வகுப்பு மாணவிகள் G.சரண்யா மற்றும் E. திவ்ய தர்ஷினி ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் K.T.உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் ஓங்கார ஆன்மீக பக்தர்கள் சங்க தலைவர் சி.பா.ஐயப்பன் பிள்ளை ஆகியோர் "சுவாமி விவேகானந்தரின் இந்து மத சேவை" என்ற தலைப்பில் சொற்பொழிவு வழங்கினர்.
|
இரவு 8 மணி அளவில் நடைபெற்ற சமய மாநாட்டு நிகழ்ச்சி |
|
கோவில் வளாகத்தில் நடந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி |
கோவில் முன்பக்க வீடியோ காட்சி
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை அளத்தங்கரை சுயம்பு, ஜி.சரோஜா ஆகியோரது சிஷ்யை செல்வி. பிரியவதனா குழுவினரின் கர்நாடக சங்கீத கச்சேரி நடைபெற்றது. இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை சமய வகுப்பு மாநாடு நடைபெற்றது. இதற்கு வெட்டூர்னிமடம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் N.காமராஜ் தலைமை தாங்கினார். பேயன்குழி பி.முருகன் முன்னிலை வகித்தார். வெள்ளமடி சிவசுடலை கோயில் சமய வகுப்பு மாணவிகள் வித்யஜோதி செல்வி ஆர்.பத்மா மற்றும் T.ரேணுகா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர்.
|
அம்மன் வெள்ளி பல்லக்கில் கோவிலை சுற்றி உலா வருதல் |
மாநாட்டில், குமரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் C.செல்வன், வீரசவார்கார் என்ற பொருளில் சிறப்புரை வழங்கினார். அம்பாசமுத்திரம் A.மணி முருகன், ஆறுபடையில் குமரன் என்ற தலைப்பிலும், வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யா பீடம், சமய வகுப்பு துணை அமைப்பாளர் பா.தர்மலிங்கம் "தாய் மதம்" என்ற பொருளில் சிறப்புரையும் வழங்கினார்கள்.
|
பாலே நிகழ்ச்சியின் தொடக்க காட்சி |
|
பாலே நிகழ்ச்சியை துவங்கி வைத்தல் |
|
"பாலே" நிகழ்ச்சியின் பல்வேறு காட்சிகள் |
"பாலே" நாடக வீடியோ - 1
"பாலே" நாடக வீடியோ - 2
"பாலே" நாடக வீடியோ - 3
தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் திருவனந்தபுரம் பிரம்ம ஸ்ரீ வழங்கும் டிஜிட்டல் டிராமா விஷன் மாந்திரிக நாட்டிய நாடகமான "மாபெரும் பாலே" நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர்.
|
ஹைந்தவ சேவா சங்க மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரை நமது "மணவை மலருக்கு" வழங்கிய சேவா சங்க பொருளாளர் சசிதரன் அவர்களுக்கு நன்றி |
திருவிழா கடைகள் சிறப்பு காட்சிகள்
|
சிறப்பு பேன்சி கடைகள் |
|
வளையல் கடையில் இருந்து பொருட்கள் வாங்கும் பக்தர் |
|
தர்பூசணி கடை |
|
மிட்டாய்கள் தூசிகள் படாமல் இருக்க வலை போட்டு மூடப்பட்டுள்ளது |
|
கரும்பு மற்றும் கரும்பு ஜூஸ் தயாரிக்கும் இயந்திரம் |
|
பேன்சி பொருட்களை பார்வையிடும் பொதுமக்கள் |
|
கடலை, பொரி, பேரீச்சம் பழ கடை |
|
கடலை வகைகள் |
|
இனிப்பு, கார வகை தின்பண்டங்கள் |
|
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க புத்தக கடை |
|
மண்டைக்காடு திருவிழா முக்கிய பொருளான கொழுந்து பூ |
|
சூடு தேன்குழல் மிட்டாய் |
பொழுதுபோக்கு பூங்கா வீடியோ காட்சி