மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
5-ம் (08-03-2012) நாள் நிகழ்ச்சிகள்
09-03-2012
மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய திருக்கோவில் 5-ம் நாள் நிகழ்ச்சிகள் 08-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டது. காலை 8 மணி முதல் 10 மணி வரை இலட்சுமிபுரம் மௌனகுரு சுவாமி சமாதி பீடம் சமயவகுப்பு பஜனைக் குழுவினரின் பஜனை நடைபெற்றது.
|
பஜனையில் கலந்து கொண்ட மாணவிகள் |
காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை "தொடர் விளக்க உரை இராமாயணம்" நடைபெற்றது. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹைந்தவ சேவா சங்க செயற்குழு உறுப்பினர் P.V.தம்பி தலைமை தாங்கினார்.மண்டைக்காடு, மணலிவிளை சமயவகுப்பு மாணவிகள் A.பிரதிபா மற்றும் T.தேவி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். "புராணத்தில் தம்பி" என்ற தலைப்பில் N.விக்னேஷ்வரன் தம்பி, "வீரத்துறவி விவேகானந்தர்" என்ற தலைப்பில், கணபதிபுரம் பொன் ராஜலிங்கம், "சமயம் காட்டும் சமுதாய பாதை" என்ற தலைப்பில், கல்லுவிளை N.பத்மநாபன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். நன்றியுரை மண்டைக்காடு C.மோகன்குமார் வழங்கினார்.
|
மதியம் நடைபெற்ற சமய மாநாட்டு நிகழ்ச்சி |
|
மணல் ஆலை சார்பாக, மண்டைக்காடு கோவிலுக்கு சென்ற சிலம்பாட்ட குழுவினர் |
|
சிலம்பாட்டத்தில் பங்குபெற்ற சிறுமி |
சிறுவர்களின் சிலம்பாட்ட வீடியோ - 1
சிறுவர்களின் சிலம்பாட்ட வீடியோ - 2
மாலை 3.30 மணி அளவில் மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து மண்டைக்காட்டிற்கு யானை மீது களப ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறுவர்களின் சிலம்ப ஆட்டம் மற்றும் மல்யுத்தம் நடைபெற்றது. சந்தன குடம் மற்றும் அம்மன் சிலை ஊர்வலமும், கல்லடிவிளை செண்டை மேளமும் ஊர்வலத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றது. ஏராளமானோர் உடன் சென்றனர்.
|
அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம் |
|
செண்டை மேளகுழுவினர் |
|
சந்தனகுட ஊர்வலம் |
|
மண்டைகாட்டிற்கு செல்லும் யானை ஊர்வலம் |
யானைக்கு தீபாராதணை செய்யப்படுகிறது
ஊர்வலம் செல்லும் காட்சி
இரவு 10.30 மணி முதல் பிரபல திரைப்பட பாடகர் T.L.தியாகராஜன் அவர்களுடன் நாகர்கோவில் S.N.சுனிஷ் ரோகிணி ஆர்கெஸ்ட்ரா வழங்கும் "மாபெரும் பக்தி இன்னிசை" நடைபெற்றது. நிகழ்ச்சியை மணவாளக்குறிச்சி மணல் ஆலை எஸ்.செல்வராஜ் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை மணல் ஆலை உபயமாக வழங்கியது. தொடர்ந்து இரவு 2 மணிக்கு பக்தி திரைப்படம் திரையிடப்பட்டது.
|
பக்தி இன்னிசை கச்சேரியில் திரைப்பட பாடகர் தியாகராஜன் பாடிய காட்சி |
|
நடிகர், இயக்குநர் மற்றும் அரட்டை அரங்கம் புகழ் விசுவின் தம்பி இன்னிசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் |
|
நிகழ்ச்சியை உபயமாக வழங்கிய மணல் ஆலை பொது மேலாளரை ஹைந்தவ சேவா சங்க நிர்வாகி கௌரவித்தனர் |
பக்தி இன்னிசை கச்சேரி துவக்க காட்சி
பக்தி இன்னிசை கச்சேரி வீடியோ காட்சி
|
நேர்ச்சைக்காக வைக்கப்பட்டுள்ள கை,கால் உருவம் |
|
பொங்கல் வழிபாட்டிற்காக விற்பனைக்கு வந்துள்ள பானைகள் |
|
மீன்கள் விற்பனை படுஜோராக நடைபெற்ற காட்சி |
|
பாதுகாப்பிற்கு வந்துள்ள படகு |