மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
6-ம் (09-03-2012) நாள் திருவிழா நிகழ்ச்சிகள்
10-03-2012
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 6-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் 09-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை திங்கள்சந்தை ஸ்ரீராம் பஜனை குழுவினரின் "பஜனை" நடைபெற்றது. காலை 10 மணி முதல் பகல் 12 வரை "தொடர் விளக்க உரை இராமாயணம்" நடைபெற்றது.
பகல் 12 மணி முதல் 1 மணி வரை லெட்சுமிபுரம் மௌனகுருபக்தை S.சாந்தா அவர்களின் ஞானப்பானா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலப்பி சகோதரிகள் செல்வி ஸ்ரீ ரேகா மற்றும் செல்வி ஸ்ரீ லேகா வழங்கும் "இன்னிசை விருந்து" நடைபெற்றது.
திங்கள்சந்தை ஸ்ரீராம் பஜனை குழுவினரின் "பஜனை" |
மாலை 3 மணி முதல் 5 மணி வரை பாரதி இளைஞர் இலக்கிய பேரவை வழங்கும் மாபெரும் "பக்தி சிந்தனை சொல் அரங்கம்" நடந்தது. செஞ்சோற்று கடன் கழிப்பதில் விஞ்சி நிற்பவர் கும்பகர்ணன்! கர்ணனே! சிங்கமுகன்! என்ற பொருளில் சொல் அரங்கம் நடந்தது. கும்பகர்ணன் என்ற தலைப்பில் வழக்கறிஞர் C.சத்திய்ய்சீலன், கர்ணனே என்ற தலைப்பில் R.சிவராஜ், சிங்கமுகன் என்ற தலைப்பில் P.அசோக்குமார் ஆகியோர் பேசினர். நடுவராக மணவாளக்குறிச்சி பத்திர எழுத்தர் திருஞான சம்பந்தம் இருந்தார்.
பெண்கள் பொங்கல் இட்டு வழிபட்ட காட்சி |
பொங்கல் வழிபாடு வீடியோ காட்சி
ஆலப்பி சகோதரிகள் செல்வி ஸ்ரீ ரேகா மற்றும் செல்வி ஸ்ரீ லேகா வழங்கும் "இன்னிசை விருந்து" |
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இருளப்பபுரம், தேவார திருவாசக பிரச்சார சபை சிவத்தொண்டர் கலைமாமணி Dr. S.சதாசிவன் அவர்களின் "பக்தி பாமாலை" மிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை "சமய மாநாடு" நடைபெற்றது. இதில் தலைவராக இராஜாக்கமங்கலம் பேராசிரியர் C.நடராஜன் இருந்தார். நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனை மருத்துவர் Dr B.V.செல்வன் மற்றும் வெள்ளாடிச்சிவிளை தொழில் அதிபர் P.முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடைவிளை இசக்கிஅம்மன் கோவில் சமயவகுப்பு மாணவிகள் செல்வி J.R.சுவேதா மற்றும் செல்வி M.கீர்த்திகா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். காரைக்கால் N.விஜயலெட்சுமி "சக்தியின் பெருமை" என்ற தலைப்பிலும், கேரளா சொர்நூர் பிரேம் குமார், "ஆன்மீக தரிசனம்" என்ற தலைப்பிலும், உண்ணாமலைகடை பேரூராட்சி தலைவர் ஆர்.ஜெயசீலன் "நாராயணகுரு" என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர்.
இரவு 8 மணிக்கு நடைபெற்ற சமய மாநாட்டு நிகழ்ச்சி |
குளச்சல் கணேசபுரத்தில் இருந்து மண்டைக்காடு
வந்த ஊர்வல வீடியோ காட்சி
மாலை 4 மணி அளவில் குளச்சல் கணேச புரம் அடைக்கலம் தந்த விநாயகர் திருக்கோவிலில் இருந்து யானை மீது களப ஊர்வலம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்திற்கு வந்தது.
குளச்சல் கணேசபுரத்தில் இருந்து மண்டைக்காடு வந்த ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடி,பாடி வந்த காட்சி |
பெண்கள் நெய் விளக்கு ஏந்தி வந்த காட்சி |
இரவு 11.30 மணி முதல் கொல்லம் நாட்டுத்துடி பக்தி நாட்டிய குழு வழங்கும் "துடிதாளம்" நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
பக்தர்களுக்கு "பானைக்கம்" வழங்கப்பட்டது |
பக்தர்களும், போலீசாரும் "பானைக்கம்" பருகினர் |
மண்டைக்காட்டில் மின்சார பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்த மின் பணியாளர்கள் |
பொங்கலிட்ட கேரள பக்தர்கள் |
கொல்லம் "துடித்தாள" நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி-1 |
கொல்லம் "துடித்தாள" நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி-2 |
கொல்லம் "துடித்தாள" நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி-3 |
கொல்லம் "துடித்தாள" நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி-4 |
கொல்லம் நாட்டுப்புற நிகழ்ச்சியான "துடித்தாள"
நிகழ்ச்சி வீடியோ - 1
கொல்லம் நாட்டுப்புற நிகழ்ச்சியான "துடித்தாள"
நிகழ்ச்சி வீடியோ - 2
கொல்லம் நாட்டுப்புற நிகழ்ச்சியான "துடித்தாள"
நிகழ்ச்சி வீடியோ - 3
கொல்லம் நாட்டுப்புற நிகழ்ச்சியான "துடித்தாள"
நிகழ்ச்சி வீடியோ - 4
வலியபடுக்கை நிகழ்ச்சியை காணும் காவலர்கள் |
வலியபடுக்கை நிகழ்ச்சியை காணும் பக்தர்கள் |
வலியபடுக்கை நிகழ்ச்சிக்கு பின்னர் தீபாராதனை வழிபடும் பக்தர்கள் |
Tags:
Events