மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
7-ம் நாள் (10-03-2012) திருவிழா நிகழ்ச்சிகள்
11-03-2012
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்
7-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் 10-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 7 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை 7 மணி முதல் 10 மணி வரை தெங்கன்குழி சமய வகுப்பு மாணவியர்கள் வழங்கும் "பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
|
சமய வகுப்பு மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது |
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை "சொற்பொழிவு போட்டிகள்" நடைபெற்றது. வடக்கு ஈத்தன்காடு ஹைந்தவ சேவா சங்க சட்ட ஆலோசகர் S.ராஜரெத்தினம் தலைமை உரையாற்றி தலைமை தாங்கினார்.பரப்பற்றை சேர்ந்த செல்வி R.பிரேமா, A.ரெம்யா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். நடுவர்களாக வெள்ளமடி,உதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் K.ஹேமலதா, குருந்தன்கோடு ஒன்றிய இந்து தர்ம வித்யா பீட அமைப்பாளர் T.தர்மலிங்கம், குருந்தன்கோடு ஒன்றிய தர்மரக்ஷண சமிதி R.சதீஷ், இந்து தர்ம வித்யா மீடம் மாவட்ட துணை அமைப்பாளர் K.கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். நன்றியுரையை இலட்சுமிபுரம் ஒய்வு பெற்ற ஆசிரியர் M.தங்ககண் கூறினார்.
பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை "சங்கத்தில் வருடாந்திர மாநாடு கூட்டம்" நடைபெற்றது. தலைவராக V.கந்தப்பன் இருந்தார். திங்கள்சந்தை, ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்க சமய வகுப்பு மாணவிகள் N.சோனியா மற்றும் N.சந்தியா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். சங்க மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றுதல், இதர விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டது. நன்றிவுரையை வடசேரி C.தாண்டவன் வழங்கினார்.
|
சமய வகுப்பு மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் காட்சிகள் |
சமயவகுப்பு மாணவிகளுக்கான போட்டி
மாலை 4 மணி முதல் 5 மணி வரை "இராமாயணம் தொடர் விளக்க உரை" நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் 8 மணி வரை "மாதர் மாநாடு" நடைபெற்றது. மண்டைக்காடு பேரூராட்சி தலைவி P.மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கி பேசினார். கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவி C.சுபத்ரா சம்பத் முன்னிலை வகித்தார். ஹைந்தவ சேவா சங்க சமய வகுப்பு மாணவிகள் R.ஆஷிபா மற்றும் S.சிவரெஞ்சனி ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர்."அன்னையின் அருள்" என்ற தலைப்பில் பழனி செல்வி மகேந்திரன் அவர்களும், "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் நாகர்கோவில் எல்.விக்டோரியா கெளரி அவர்களும், "திருவிளக்கு வழிபாட்டின் மகிமை" என்ற தலைப்பில் செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை இராமசெல்வி திருமதி உடையார் அவர்க்களும் "சரணாகதி தத்துவம்" என்ற தலைப்பில் உன்னங்குளம் சங்கர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் Cஅன்னபழம் அவர்களும் சொற்பொழிவு வழங்கினர். நன்றிவுரையை உடையார்விளை சமயவகுப்பு ஆசிரியை மேரி கூறினார்.
|
மாதர் மாநாடு நடைபெற்ற காட்சி |
|
சமய மாநாடு நடைபெற்ற காட்சிகள் |
திருவிழா கூட்டத்தின் ஒருபகுதி
இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. தலைமை உரை நிகழ்த்தி R. அப்பு நடேசன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் Rtn. MPHF K.N.பெருமாள் பிள்ளை மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி தலைவர் T.வைகுண்டமணி முன்னிலை வகித்தனர். சாத்தான்விளை முத்தாரம்மன் திருக்கோவில் கமய வகுப்பு மாணவிகள் செல்வி C.செண்பகபூர்ணா, K.அஸ்மிதா, T.அனுஷா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினார். "அருளாளர் ராமானுஜம்" என்ற தலைப்பில் திண்டிவனம் Dr.வேட்டவராயன் அவர்களும், "பக்தி நெறி" என்ற தலைப்பில் குற்றாலம் பேராசிரியை Dr. வேலம்மாள் அவர்களும், "திருமந்திரம் காட்டும் அருள் நெறி" என்ற தலைப்பில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி செயலாளர் கி.தாண்டேஷ்வரன் அவர்களும் சொற்பொழிவு வழங்கினர்.
|
அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வந்த காட்சி |
இரவு 11.30 மணிக்கு மேல் திப்பிரமலை K.G. சங்கீத பிரியா ஆர்ட்ஸ் சார்பில் "மாபெரும் பாலே" நிகழ்ச்சி நடைபெற்றது. பாலேயின் கதை "மாளவபுரியிலே மாயா பகவதி" என்பதாகும். நிகழ்ச்சியை நெய்யாற்றின்கரை ஆலமூடு பாலன் சிலங்கை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை பாலப்பள்ளம் மாதவம்மாள் பிரஷ் ஒர்க்ஸ் எம்.கோலப்பாபிள்ளை உபயமாக வழங்கினார்.
|
பாலே நாடகத்தின் பல்வேறு காட்சிகள் |
"பாலே" நாடகத்தின் வீடியோ காட்சி - 1
"பாலே" நாடகத்தின் வீடியோ காட்சி - 2
"பாலே" நாடகத்தின் வீடியோ காட்சி - 3
மண்டைக்காடு கோவிலை சுற்றிய சிறப்பு காட்சிகள்
|
விநாயகர் கோவிலில் வழிபடும் பக்தர்கள் |
|
பாதுபாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள காவல் மேடை |
|
பக்தர்களின் கூட்டம் |
|
கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் |
|
கடற்கரையில் குவிந்த மக்கள் |
|
அதிகமான அடல் சீற்றத்தால் பாதுகாப்பு பணியில் காவலர்கள் |
|
வெப்பத்தை தணிக்க ஐஸ் கிரீம் சாப்பிடும் பெண்கள் |
|
கடற்கரை சாலையில் உள்ள காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் |
|
மண்டைக்காடு - குளச்சல் சாலை பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழல் குடையின் மேல் இருந்து பக்தர்களை கண்காணிக்கும் பெண் காவலர்கள் |
|
மண்டைக்காடு ஸ்பெஷல் கொட்டுகள் |
|
அம்மனை வழிபட பக்தர்கள் வரிசையில் செல்லும் காட்சி |