மணவாளக்குறிச்சி பகுதி கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு: எம்சிஏ பட்டதாரி பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

நாகர்கோவில். வெட்டூர்ணிமடம் மேற்கு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜா சுந்தர்சிங். இவரது மகள் ஆஷா (வயது 27). எம்சிஏ பட்டம் பெற்றுள்ளார்.
இவருக்கும், மணவாளக்குறிச்சி, தருவை பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் மகன் நிஷாந்த் (வயது 28) என்பவருக்கும் கடந்த 21-08-2017 இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 80 பவுன் நகை, 25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை சீதனமாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆஷா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்த பின்னர் தாய் வீடிற்கு சென்றார். அதன்பிறகு நிஷாந்த் மனைவியை சென்று பாரக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகும் நிஷாந்த் மனைவியை பார்க்கவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில் நிஷாந்த் குடும்பத்தினர் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ஆஷாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஷா இரணியல் கோர்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவர் நிஷாந்த், அவரது தாயார் கீதா, தந்தை ஸ்ரீகுமார் மற்றும் உறவினர்கள் ஸ்டெனிலா, அவரது கணவர் ஹரி ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டது.

மகளிர் போலீசார் கணவர் நிஷாந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous News Next News