கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று (14-02-2018) சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், உயிர்ப்பையும் தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டு தவக்கால நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி சாம்பல் புதன் நிகழ்வு நேற்று காலை கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிஷப் நசரேன் சூசை திருப்பலி நிறைவேற்றினார். பங்கு மக்கள் நெற்றியில் சாம்பலை சிலுவை வடிவில் பூசினார். இதற்கான சாம்பல் கடந்த முறை குருத்தோலை பவனியில் பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து தயார் செய்யப்பட்டிருந்தது. தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வார தொடக்கமாக வரும் மார்ச் 25-ம் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது. மார்ச் 29-ம் தேதி புனித வியாழன் ஆகும்.
அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 30-ம் தேதி புனித வெள்ளி ஆகும். அன்று பகல் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நற்கருணை வழிபாடும், பிற்பகலில் ஏசுவின் பாடுகளை தியானிக்கும் சிறப்பு திருச்சிலுவை நிகழ்ச்சியும் நடைபெறும். 31ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசுவின் உயிர்ப்பை தியானிக்கும் ஈஸ்டர் திருப்பலி நடைபெறுகிறது.
ஏப்ரல் 1-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பதுடன் திருமணம், சுபகாரியங்களை தவிர்த்தல், அசைவ உணவுகள், ஆடம்பரங்களை தவிர்த்து உபவாசத்துடன் கூடிய ஜெபம், தவத்தில் முழுமையாக தங்களை கிறிஸ்துவர்கள் ஈடுபடுத்திக்ெகாள்கின்றனர். மேலும் முக்கிய நிகழ்வுகளாக வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் சிலுவைப் பாதை, ஜெபவழிபாடு தவக்கால நற்செய்தி போன்றவையும் நடத்தப்படுகிறது.
Tags:
District News
This comment has been removed by the author.
ReplyDelete