மணவாளக்குறிச்சி ஊரை சேர்ந்தவர் எம். சுல்த்தான் (வயது 80) அவர்கள். இவர் மணவாளக்குறிச்சி அமைந்துள்ள இந்திய அறிய மணல் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
இவர் நாகர்கோவிலில் உள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (04-11-2017) மாலை 4.30 மணி அளவில் மரணமடைந்தார்.
அன்னாரது நல்லடக்கம் இன்று காலை 10 மணி அளவில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நடைப்பெற்றது. அவரது குடும்பத்தார்களும், மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Tags:
Announcements