மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு தங்க தேர்: மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பக்தர்கள் நன்கொடை மூலம் தங்க தேர் செய்யப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (07-08-2017) தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரள மாநிலத்தில் உள்ள பெண்கள் தலையில் இருமுடி கட்டு ஏந்தி வந்து கடல் குளித்து வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் மாசிக் கொடை விழா பிரசித்தி பெற்றதாகும். ஒன்பதாம் நாள் விழாவில் நடைபெறும் சக்கர தீவெட்டி ஊர்வலம், 10-ம் நாள் விழாவில் நடைபெறும் ஒடுக்குபூஜை ஆகியவை பக்திபூர்வமானதாகும்.

தற்போது ஸ்ரீஅம்மன் தங்கரத அறக்கட்டளை சசார்பில் கோயிலுக்கு தங்க தேர் காணிக்கையாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்களிப்பு இருக்கும் வகையில் நன்கொடை மூலம் இந்த தேர் செசய்யப்படுகிறது. மயிலாடியில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் பணம் திரட்டும் பணியை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

Post a Comment

Previous News Next News