மணவாளக்குறிச்சி அருகே திருநயினார் குறிச்சி சந்திப்பில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் உடனே அகற்ற வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்தது.
அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதா கிருஷ்ணன், குருந்தன்கோடு கிழக்கு வட்டார தலைவர் ஜாண்கென்னடி, மண்டைக்காடு பேரூர் காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜ் உள்பட திரளான காங்கிரசார் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Tags:
Manavai News