மணவாளக்குறிச்சி அருகே ஆட்டோவில் கடத்திய 400 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் பறிமுதல்

மணவாளக்குறிச்சி வழியாக மண்எண்ணெய் கடத்துவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும்படை தாசில்தார் ஜாண் அலெக்சாண்டர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் மணவாளக்குறிச்சி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, அதிகாரிகள் ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் 12 கேன்களில் 400 லிட்டர் ரே‌ஷன் மண்எண்ணெய் இருந்தது.

இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவுடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

Post a Comment

Previous News Next News