குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
7-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 2-வது சனிக்கிழமையான 8.4.2017 அன்று மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மார்ச் 7-ம் தேதி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:
Surrounded Area