மணவாளக்குறிச்சி “ஏடிம்” -ல் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர்  மோடி அவர்களால், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், பண தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 45 நாட்களாகியும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் பணம் எடுக்க காத்து கிடக்கின்றனர்.
மணவாளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். பணம் எடுக்க காலதாமதம் ஏற்படுவதோடு, தேவையான பணத்தை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாயினர்.
பணம் எடுத்து செல்ல நாள் முழுதும் காத்து நிற்பதாக பலர் கூறுகின்றனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.


போட்டோஸ்
ஷியாத்
மணவாளக்குறிச்சி

Post a Comment

Previous News Next News