முட்டம் அருகே விசைப்படகில் மயங்கி விழுந்த மீனவர் சாவு: மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்

நாகர்கோவில் அருகே உள்ள காட்டுப்புதூரை சேர்ந்தவர் அய்யப்பன் என்ற கபிரியேல்(வயது 58). மீன் பிடி தொழிலாளி. இவர் தற்போது திக்கணங்கோடு அருகே கப்பியறை பனவிளையில் வசித்து வந்தார். இவர் கடந்த 22-ம் தேதி தாசன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். இவருடன் மேலும் 13 பேர் சென்றனர். அனைவரும் முட்டம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கபிரியேல், விசைப்படகில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அதே விசைப்படகில் நேற்று மாலை முட்டம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் கபிரியேல் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த கபிரியேலுக்கு சந்திரிகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Post a Comment

Previous News Next News