மண்டைக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

மண்டைக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்
03-02-2016
மண்டைக்காடு போலீஸ் சரகம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). தொழிலாளி. இவருடைய மகன் ஆனந்தராஜ் (24), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுயம்புராஜன் (27) என்பவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த லினோ (30), சுயம்புராஜன், சேகர் (32), ராதாகிருஷ்ணன் (56) ஆகிய 4 பேரும் சேர்ந்து முருகேசன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லினோ, சுயம்புராஜன், சேகர், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous News Next News