மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிப் திருவிழா 28–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
21-02-2016
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமை விழா நிறைவுபெறும் வகையில் 10 நாட்களுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதனடிப்படையில் இந்த வருட திருவிழா வருகிற 28– ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8– ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழா நாட்களில் தினசரி காலை 6.30 மணி, மதியம் 1 மணி, மாலை 6.30 மணி மற்றும் இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனையும், 3–ம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை தினசரி காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும் நடக்கிறது.
முதல் நாள் காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கொடியேற்று, மதியம் 1 மணிக்கு கருமன் கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்திலிருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வந்து படைத்து அலங்கார தீபாராதனை.
3–ம் நாள் மாலை 3 மணிக்கு கீழ்கரையிலிருந்து யானை மீது களபம் பவனி, இரவு 10 மணிக்கு கதகளி, 4–ம் நாள் மாலை 3 மணிக்கு கொத்தனார் விளையில் இருந்து களபம் பவனி, 5–ம் நாள் மாலை 4 மணிக்கு மண வாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.,யில் இருந்து யானை மீது களபம் பவனி.
6–ம் நாள் பகல் 12 மணி மற்றும் மாலை 4 மணிக்கு களபம் பவனி, இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை, 7–ம் நாள் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் மணவாளக்குறிச்சியில் இருந்து சந்தனகுடம் பவனி, 9–ம் நாள் காலை 7.30 மணிக்கு பைங்குளத்திலிருந்து சந்தனகுடம் மற்றும் காவடி பவனி, 9.30 மணிக்கு யானை ஊர்வலம், இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் அலங்கார பவனி.
10–ம் நாள் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து யானை ஊர்வலம், 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் அம்மன் பவனி, காலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை அடியாந்திர பூஜை, குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் லட்சுமணன், கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்