குளச்சல் அருகே ரோட்டில் அனாதையாக கிடந்த ரூ. 10 ஆயிரம்: மாற்றுத்திறனாளி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்

குளச்சல் அருகே ரோட்டில் அனாதையாக கிடந்த ரூ. 10 ஆயிரம்: மாற்றுத்திறனாளி மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்
05-02-2016
இனயம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ். இவருடைய மகன் ஸ்டான்லி (வயது 34). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மாலை இனயத்தில் இருந்து குளச்சலுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மிடாலக்காடு ரோட்டில் ஆலஞ்சி அருகில் சென்ற போது நடுரோட்டில் அனாதையாக ரூபாய் நோட்டுகள் கிடந்தது.
அந்த பணத்தை ஸ்டான்லி எடுத்து எண்ணி பார்த்த போது ரூ.10 ஆயிரம் இருந்தது. இதனையடுத்து பணத்தை அவர் குளச்சல் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை பாராட்டினார். இந்த பணம் யாருடையது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous News Next News