குளச்சல் வர்த்தக துறைமுகம் மீனவர்கள் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை
23-12-2015
தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளனர்.இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது.
தென்மாவட்ட வளர்ச்சிக்கான மிகப்பெரிய திட்டமான குளச்சல் வர்த்தக துறைமுகம் என்பது மாவட்ட மக்களின் 40 ஆண்டு கால கனவு திட்டம். இந்த திட்டம் வருவதற்காக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஆதரிப்பதும், எதிர்கட்சி ஆன பின்பு எதிர்ப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது மக்கள் என்ணி நகையாடும் நிலை. தற்பொழுது கேரளா மாநிலம் விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்க திட்டமிட்ட பின்பும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரு~;ணன் முயற்சியால் 21,500 கோடி செலவில் மதர் கண்டெய்னர் போர்ட் (இந்தியாவிலே மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாக அமைய உள்ளது).
ஏற்கெனவே மீனவ மக்கள் வசிக்கும் மும்பை, கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களை எடுத்து கொண்டால் அந்த பகுதி மீனவ மக்களுக்கு எந்த விதமான ஒரு சிறிய பாதிப்புகள் இல்லாமல் மீன்பிடித்து நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். இங்கு மேற்படி வர்த்தக துறைமுகம் ஏற்கெனவே 18 நாடுகளில் கடலில் விமான நிலையம் உள்ளது போன்று தென்மாவட்டமே வளர்ச்சி தரும் வகையில் கடலிலே இந்த துறைமுகம் மிகுதியான பகுதி அமைய உள்ளதாக அறிகின்றோம். இந்த துறைமுகங்களை எல்லாம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று அந்த பகுதி மீனவர்கள், மக்கள் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளார்கள் என்பதை நேரில் சென்று பார்வையிட்டாலே அதன் உண்மை தன்மை தெரியவரும்.
மேலும் தற்பொழுது நமது மாவட்டத்தில் மட்டும் சின்னமுட்டம், முட்டம், தேங்காய்பட்டணம், ராஜாக்கமங்கலம் போன்ற பெரிய, சிறிய மீன்பிடித் துறைமுகம் மிகுதியான அளவு மீன்பிடிக்க வசதியாக உள்ளது. திட்டம் குறித்த தெளிவான விபரம் தெரிவதற்கு முன்பே மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்துவது தேவையற்றது. இந்த திட்டத்தில் ஒரு சில இடங்களில் சிறிய அளவு பாதிப்புகள் இருந்தாலும் கூட குமரி மாவட்டத்திலுள்ள 18 இலட்சம் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும். குமரி மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு சென்று வேலை பார்;ப்பதற்கு பதிலாக உள்ளுரிலே மிகப்பெரிய வேலைகள் கிடைக்க நல்ல வசதிகளும், வாய்ப்புகளும் ஏற்படும்.
இதனால் வேறு மாநில மக்களும் நம் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் கொடுக்கும் நிலை ஏற்படும். மாவட்ட மக்களின் வாழ்க்கை தரம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புகள் ஏற்படும். மாவட்ட வளர்ச்சியை தடுக்காதீர்கள். 40 ஆண்டுகால மாவட்ட மக்களின் கனவு திட்டம் நிறைவேற ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகத்தையும், அனைவரையும் வேண்டுகிறோம் என தமது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
நன்றி
S.R Sreeram
Counsumer Protection Association
Kanyakumari District
Kottar
Nagercoil-629002
Mobile: 9443204652
Tags:
District News
குளச்சல் வர்த்தகத் துறைமுகம் வந்தால் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என பொன். இராதாகிருஷ்ணன் பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு நேர்மாறாக கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நடக்கும் ஸ்ரீராம் 15 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என தினமணியில் அறிவிக்கை விட்டுள்ளார். அதாவது குமரி மாவட்டத்திலுள்ள எல்லாருக்கும் வேலை. ஸ்ரீராமை மத்திய கப்பல்துறை அமைச்சத்தின் இயக்குனராக அறிவித்து விடலாமா?
ReplyDelete