மணவாளக்குறிச்சி அருகே சானலில் ஆண் பிணம்: போலீஸ் விசாரணை
03-09-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை சரல் பகுதியில் ஒரு சானல் உள்ளது. அந்த சானலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஓன்று மிதந்து வந்தது. இறந்த நபர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி தங்கத்துரை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்