மணவாளக்குறிச்சி, பரப்பற்று சிவசக்தி கலாமன்றம் சார்பில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி பவனி
18-08-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று, மணக்காட்டுவிளை சிவசக்தி கலாமன்றத்தின் 24-வது ஆண்டு விழா மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி கட்டும் விழா 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெற்றது.
17-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 5.30 மணிக்கு காவடி தீபாராதனை, காலை 9 மணிக்கு கொடியேற்றம், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு நையாண்டிமேளம், இரவு 7 மணிக்கு வேல் தரித்தல், இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல், 8.30 மணிக்கு காவடி தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
18-ம் தேதி நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு சிவசக்தி மன்ற பொருளாளர் மணிகண்டன் தலைமையில் காவடி கட்டுதலும், காலை 6.30 மணிக்கு காவடி தீபாராதனையும், 7 மணிக்கு காவடி பவனி வருதலும், பகல் 11 மணிக்கு சமபந்தி போஜனம் நிகழ்வும், 12.30 மணிக்கு ஸ்ரீபகவதி செண்டைமேள நிகழ்வும் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு திருச்செந்தூர் செந்திலாண்டவர் சன்னதி நோக்கி பறக்கும் தொட்டில் வேல் காவடிகள், ஆறடி வேல்காவடி, புஷ்ப காவடி ஆகியவைகள் புறப்பட்டன.
காவடிகள் பரப்பற்று, கூட்டுமங்கலம், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, வெள்ளமடி வழியாக திருச்செந்தூர் சென்றது.
போட்டோஸ்
"புதியபுயல்" முருகன்
மணவாளக்குறிச்சி
Tags:
Manavai News