மணவாளக்குறிச்சி சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு திறப்பு: மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
17-08-2015
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உயர் கோபுர விளக்கை திறந்து வைத்தார்.
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் லிசி, 12-வார்டு உறுப்பினர் பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதிய ஜனதா கட்சி பேரூர் தலைவர் கார்த்திகேயன் என்ற கண்ணன், துணைத்தலைவர் ஐயப்பன், செயலாளர் லிங்கேஸ்வரன், மணிகண்டன், காளி, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி துணைத்தலைவர் குட்டி ராஜன், வார்டு உறுப்பினர்கள் சகாயராஜ், ஆஸ்டின், பிரகாசியாள், மனோன்மணி, திலகவதி, குமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போட்டோஸ்
“புதியபுயல்” முருகன்
மணவாளக்குறிச்சி
Tags:
Manavai News