மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா 1-ம் தேதி தொடங்குகிறது
27-08-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா வருகிற 1-ம் தேதி துவங்கி 3-ம் தேதி வரை நடக்கிறது. கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா வருடந்தோறும் நடைபெறும். அதுபோல் இந்த வருடமும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடக்கிறது.
1-ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 5 மணிக்கு மகாசுமங்கலி பூஜையும் நடக்கிறது. 2-ம் தேதி காலை 10 மணிக்கு பக்திகான சபாவும், 10.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், காலை 11 மணிக்கு ஆவணி அஸ்வதி மொன்கள் விழாவும் நடக்கிறது. இந்த விழாவில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அம்மனுக்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிடுவார்கள். மதியம் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு பூஜையும் நடக்கிறது.
3-ம் தேதி மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் ஆன்மிக கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் பொன். சுவாமிநாதன், பத்மநாபபுரம் தேவஸ்தான தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆருமுகதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்